தாய்லாந்து : கைக்கெட்டியது வாய்க்கு ……பரிசுச் சீட்டில் ரூ. 17 கோடி பரிசு : தற்கொலை செய்து கொண்ட நபர்…..

பரிசுச் சீட்டில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவாகாரம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் வசித்து வந்தவர் ஜிராவத் பாங்பான்(42). ஏழையாக தனது வாழ்க்கையை ஓட்டி வந்த அவர் சமீபத்தில் ஒரு பரிசு சீட்டை வாங்கியிருந்தார். அதிர்ஷ்டவசமாக அதில் அவருக்கு ரூ17 கோடி பரிசு விழுந்தது.

ஆனந்த அதிர்ச்சியில் திக்கு முக்காடிய அவருக்கு சோதனை காத்திருந்தது. ஆம்!. அவருடைய லாட்டரி சீட்டை காணவில்லை. வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை.

பரிசு விழுந்தும், பரிசு சீட் கிடைக்காமல் போனதால் மனமுடைந்த அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் இந்த விபரங்களை அவர் ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

அவருடைய பரிசு சீட்டை யார் எடுத்து சென்றார்கள் எனத் தெரியவில்லை. பரிசுத் தொகை கேட்டு இதுவரைக்கும் யாரும் உரிமை கோரவும் இல்லை. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.