சர்வதேச விருதுகளைப் பெற்று   இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் நாடு திருப்பினார்!
சர்வதேச வெண்கலப்பதக்கமும்   ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் பெற்றார்!
(காரைதீவு  நிருபர் சகா)
தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழினுட்பக்கண்காட்சியில்  இலங்கைத்தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் இரு பதக்கங்களைப்பெற்று  நாடு திரும்பியுள்ளார்.
2018 இற்கான அறிவியல் புலமை தொழில் நுட்ப கண்காட்சிதாய்லாந்து  மாநாட்டு  மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.6 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர்.
 அப்போட்டியில் இலங்கை  சம்மாந்துறையைச்சேர்ந்த  இளம் தமிழ் விஞ்ஞானி  சோமசுந்தரம் வினோஜ்குமார் போட்டியிட்டு சர்வதேச வெண்கல விருதையும் உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ‘சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருது’ ஐயும் பெற்றுக் கொண்டார்.97 நாடுகளை சேர்த 1800 விஞ்ஞானிகள் போட்டியிட்டனர். இப்போட்டியில் 4 மலேசிய தமிழர்களுடன் சேர்த்து 1 ஈழத் தமிழனாக போட்டி இட்டு வெற்றி அடைந்து உள்ளார்.
 இவ் விருது ‘கணித உதவியாளன்’ எனும் கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் கண்டுபிடிப்புக்கே வழங்கப்பட்டது.
தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை  ஶ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை சம்மாந்துறை  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளதோடு 31 தேசிய விருதுகளையும் 3 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் எமது ‘அன்பே சிவம்’ அறப்பணி அமைப்பின் தொண்டரும் ஆவார். இவன் தமிழ் ஈழத்தின் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி இந்த தமிழன் எங்களின் கலாசாரம் உடையில் தனது தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
தாயகத்தில் முதல்கருத்து!
அவர் முதன்முறையாக வெளிநாட்டுப்பயணமொன்றில் அதுவும் கண்டுபிடிப்புகளுக்கான புலமைப்பரிசில்பெற்று  தாய்லாந்ததிற்குச்சென்று  அங்கு விருதுகளைப்பெற்று நாடு திரும்பியவேளை கட்டுநாயக்க விமானநிலையத்தில்வைத்து அவரிடம் கருத்துக்கேட்டபோது அவர் பின்வருமாறு உணர்ச்சிததும்பக் கூறினார்.
எனது இரண்டு கண்களான சம்மாந்துறை  முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கும்
சம்மாந்துறை  கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மேலும்எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும்
எங்கள் அறப்பணி அன்பே சிவத்திற்கும்
தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் முசாதிக் சேர்
கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன சேர்
யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கந்தசாமி சேர்
இலங்கை புத்தாக்குனர் ஆணையாளர் மகேஸ் எதிரிசிங்க சேர்
உதவி ஆணையாளர் கல்பனி ராஜபக்ச
இலங்கை இறப்பர் ஆராய்ச்சி பேராசிரியர் மகாநாம
என்னை வெளியுலகிற்கு காட்டி ஊக்கமளித்த காரைதீவு கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா சேர்
மற்றும்   இன மத பேதமின்றி நாடு கடந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள்.
என்னுடைய கண்டுபிடிப்பு என்னைப் பொறுத்தவரை தரம் என்பதற்கு அல்ல. உங்கள் அனைவரது ஆசிர்வாதம் மற்றும் ஊக்கப்படுத்தலே மிக முக்கியமாக இருந்தது. இதற்கு முதல் இக் கண்டுபிடிப்பை விட ஓரளவு சிறந்த கண்டுபிடிப்பைச் செய்தேன் ஆனால் தழிழன் என்பதற்காக என்னவோ தெரியாது எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை. எல்லா இடத்திலும் எல்ல இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ஒருசில நல்லவர்களிள் நட்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த விருது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இவ் விருது கிடைத்தது.
‘புதியவற்றினை ஏற்படுத்தாத தேசம் எழுச்சி பெறாது.’ எனவே எமது நாட்டில் என்னை விட பல திறமை வாய்ந்த எத்தனையோ பல கண்டுபிடிப்பாளர்கள் இருக்கின்றார்கள். இன மத பேதமின்றி அனைவரும் திறமைக்கு மதிப்பு வழங்கினால் மாத்திரமே எமது நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய சமாதானமும் அபிவிருத்தியும் அடையும்.இதனை அரசியலினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினாலோ ஏற்படுத்த முடியாது.என்றார்
நாளை வீடு திரும்பும் இவருக்கு ஊரில் சிறுவரவேற்பு அளிக்க ஆலயசபையினர் ஏற்பாடுசெய்திருப்பதாக தெரிகிறது.

By admin