வேல்சாமிதலைமையில் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை நேற்று நல்லூரிலிருந்து ஆரம்பம் !
(காரைதீவு  நிருபர் சகா)
 
இந்துக்களின் புனித சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலகசைவத்திருச்சபை  வருடாந்தம் நடாத்திவரும் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை நேற்று (8)யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து  ஆரம்பமாகியது.
காரைதீவைச்சேர்ந்த கதிர்காம பாதயாத்திரைக்குழுத்தலைவர் வேல்சாமி தலைமையில் இப்பாதயாத்திரை   2ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பாதயாத்திரை 7தினங்கள் நடந்த  செம்மணி நாவற்குழி பூநகரி முழங்காவில் சங்குப்பிட்டி ஆத்திமோட்டை பாப்பாமோட்டை பாதை வழியாக சுமார் 150கிலோமீற்றர் கடந்துசெல்லவுள்ளனர்.எதிர்வரும் 13ஆம் திகதி சிவராத்திரியன்று காலை திருக்கேதீஸ்வரத்தை குழுவினர் சென்றடைவார்கள்.
2018.02.13ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வர பாதயாத்திரை கடந்த   2018.02.07ந் திகதி காலை தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது தெரிந்ததே.
உலகசைவத்திருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் ஜயாவின் எற்பாட்டில் நடைபெற்றுவரும் இப்பாதயாத்திரை இம்முறை 3வது வருடமாக நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாதயாத்திரை வேல்சாமி வருடாந்தம் கதிர்காமம் வெருகல் மண்டுர் திருக்கேதீஸ்வரம் ஆகிய 4 திருத்தலங்களுக்கு பாதயாத்திரை சென்றுவருவது தெரிந்ததே

By admin