இன்று காரைதீவில் 14 வாக்களிப்பு நிலையங்கள்!13ஆயிரம் பேர் வாக்களிப்பர்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
இன்று(10) நடைபெறும் உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் காரைதீவுப் பிரதேசபைக்கான தேர்தலில் 14 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலினவிக்ரமரத்ன தெரிவித்தார்.
17குறிச்சிகளை 7வட்டாரங்களாகக்கொண்ட காரைதீவில் மொத்தமாக 12972 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் இன்று 14 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பார்கள். இன்று மாலை அந்தந்த வட்டாரத்தில் வாக்கெண்ணல் நடைபெறும்.
இதில் 04 தமிழ் வட்டாரங்களில் 7944தமிழ் வாக்காளர்களும்(61வீதம்)  03 முஸ்லிம் வட்டாரங்களில் 5028 முஸ்லிம் வாக்காளர்களும்(39வீதம்)  உள்ளனர்.
 
14 வாக்களிப்பு நிலையங்கள்!
வட்டாரம் 1 மாளிகைக்காடு கிழக்கில் இரு வாக்களிப்பு நிலையங்கள் மாளிகைக்காடு கலாசார மண்டபத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. மண்டபம் ஒன்றில் 680வாக்காளர்களும் மண்டபம் 2இல் 990வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
அதேபோல் வட்டாரம் 2 மாளிகைக்காடு மேற்கில் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் ஒரு வாக்களிப்புநிலையம் ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு 1338வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
 காரைதீவு வடக்கு 1ஆம் 2ஆம் 5ஆம் குறிச்சிகளைக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட 3ஆம் வட்டாரத்தில் இருவாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையில் ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதில் 1235பேரும் காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதில் 511பேரும்        வாக்களிக்கவுள்ளனர்.
காரைதீவு மேற்கு 6ஆம் 7ஆம் 10ஆம் குறிச்சிகளைக்கொண்ட 4ஆம் வட்டாரத்தில் மூன்று வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. காரைதீவு விஸ்ணு  வித்தியாலயத்தில்  இரு வாக்களிப்பு நிலையங்கள்  அமைக்கப்பட்டு 1ஆம் மண்டபத்தில்  864பேரும் 2ஆம் மண்டபத்தில்  677பேரும்        வாக்களிக்கவுள்ளனர். 3ஆம் வாக்களிப்புநிலையம்; காரைதீவு.6 பல்தேவைக்கட்டடத்தில் அமைக்கப்பட்டு 427பேர் வாக்களிக்கவுள்ளனர்.
5ஆம் வட்டாரமான  மாவடிப்பள்ளியில் இரு வாக்களிப்புநிலையங்கள் மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. முதல் மண்டபத்தில் 975வாக்காளர்களும்  இரண்டாம் மண்டபத்தில் 1045வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
காரைதீவு கிழக்கு  3ஆம் 4ஆம் 8ஆம் 9ஆம் குறிச்சிகளைக்கொண்ட 7ஆம் வட்டாரத்தில் இரு வாக்களிப்புநிலையங்கள் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலும்  ஏற்படுத்தப்படவுள்ளன. முதல் மண்டபத்தில் 1147வாக்காளர்களும்  இரண்டாம் மண்டபத்தில் 657வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
 காரைதீவு தெற்கு 11ஆம் 12ஆம் குறிச்சிகளைக்கொண்ட 6ம் வட்டாரத்தில் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இரு வாக்களிப்புநிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. முதல் மண்டபத்தில் 929வாக்காளர்களும்  இரண்டாம் மண்டபத்தில் 1497வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
காரைதீவிலுள்ள 7வட்டாரங்களும் தனி அங்கத்தவர் வட்டாரமாகும்.
காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் 11 ஆசனங்களை இலக்குவைத்து 6கட்சிகள் 2சுயேச்சைகள் வாயிலாக 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
கலப்புமுறைத்தேர்தலில்  வட்டாரமுறைத்தேர்தல் மூலம் நேரடியாக 7வட்டாரங்களுக்கும் 4தமிழர் 3முஸ்லிம்கள் உள்ளிட்ட 7பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
விகிதாசாரமுறை மூலமாக மீதி 4 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தமாக 11 பிரதிநிதிகள் காரைதீவுப்பிரதேச சபைக்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

By admin