ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வன்முறை நிகழ்திருப்பின் அந்த முழுவட்டாரத்தினதும் வாக்கெண்ணல் தாமதமாகும்
அம்பாறை உதவி தேர்தல் ஆணையாளர் திலின கூறுகிறார்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
இன்று நடைபெறவிருக்கும்  உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஏதாவதொரு வட்டாரத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வன்முறை நிகழ்ந்ததாக அறிவிக்கப்படின் அந்த முழுவட்டாரத்திற்கான வாக்கெண்ணல் தாமதமாகும்.
என்று அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலினவிக்ரமரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்:
வன்முறை நிகழ்ந்திருப்பின் அவ்வன்முறையோடு தொடர்புடைய அனைத்து அறிக்கைகளையும் வலயப்பொறுப்பு தெரிவத்தாட்சி அலுவலருடாக உள்ளுர் அதிகாரசபையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும்பொறுப்பான இணைப்பு உதவிதெரிவத்தாட்சி அலுவலருக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
வாக்கெண்ணல் நிலையங்களிலும் வளாகத்திலும் போதிய வெளிச்சநிலை காணப்படவேண்டும் அத்துடன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
வட்டாரத்தில் எண்ணுதல்!
ஒவ்வொரு உள்ளுர் அதிகாரசபையும் குறிப்பாக வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் தெரிவாகும் உறுப்பினர் யார் என்பது அங்கு இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பில் தங்கியுள்ளது.
குறித்த வட்டாரத்தில் வாக்கெண்ணல் பரிபூரணமாக நடைபெற்றமை உறுதிப்படுத்தபிற்பாடு  வெற்றிபெற்ற கட்சியின் பெயர் சின்னம் என்பன அந்த இடத்திலேயே வெளியிடப்படும். பெரும்பாலும் இம்முடிவு 7மணியளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகிதாசாரப்பிரதிநிதித்துவத்தின்படி தெரிவாகும் உறுப்பினர்கள் தொடர்பில் அந்த முழு சபைக்குமாக அளிக்கப்படும்  வாக்குகளின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது.
ஒரு வட்டாரத்திற்குரிய வாக்கெண்ணல் அந்தந்த வட்டார வாக்குச்சாவடியில் எண்ணப்படும். சிலவேளை பல வாக்குச்சாவடிகள் இருப்பின் கணிசமானவாக்குள்ள நிலையத்திற்கு கொண்டுவந்து ஓரிடத்தில் ஆனால்  வௌ;வேறாக எண்ணப்படும்.
கடந்தகாலங்களில் முழு மாவட்டத்திலும் இடப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஓரிடத்திற்குக் கொண்டுவரப்பட்டு  அங்கு அடைக்கப்பட்ட அறைகளினுள் இரவுபூராகவிருந்து எண்ணுவர்.காலையில் முடிவுகள் வெளிவரத்தொடங்கும்.
 
3 கட்டங்களாக வாக்கெண்ணல்.
வரலாற்றில் முதல் தடவையாக வாக்குகள் அந்த வட்டாரத்திலே எண்ணப்படுகின்ற சந்தர்hப்பம் இன்று உள்ளது. வாக்கெண்ணல் அந்தந்த வட்டாரத்தில் 3 கட்டங்களாக எண்ணப்படும்.
வாக்களிப்பு நிலையத்தின் சிரேஸ்ட்டதலைமைதாங்கும் அலுவலரே வாக்கெண்ணலுக்கும் பொறுப்பான அலுவலராக செயற்படுவார்.
1ஆம் கட்டத்தில் ஒவ்வொரு பெட்டியிலுமுள்ள வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வாக்கச்சீட்டுக்கணக்கோடு ஒப்பிடல்.
2ஆம் கட்டத்தில் குறித்த வட்டாரத்தின் அஞ்சல் வாக்கு சீட்டுக்களின் எண்ணிக்கை 50இலும் குறைவு எனின் அவற்றை ஏனைய சாதாரண வாக்குச்சீட்டுக்களோடு கலந்து எண்ணுதல்வேண்டும். 50இலும் கூடுதலாக இருந்தால் அதனை வேறாக எண்ணுதல் வேண்டும்.
3ஆம் கட்டத்தில் ஒவ்வொரு கட்சி அல்லது குழுவினால் பெற்ற வாக்ககளின் எண்ணிக்கையை வௌ;வேறாக எண்ணுதல்.
மீள எண்ணுதல்!
வாக்கெண்ணலில் ஏதாவது ஜயம் இருந்து ஏதேனுமொரு கட்சி அல்லது குழுவின் வாக்கெண்ணும் முகவரொருவரின் அல்லது முகவர்கள் அனைவரினதும் கோரிக்கைக்கு அமைவாக மீள வாக்கெண்ணல் அனுமதிக்கப்படும்.
எனினும் இந்த மீளஎண்ணலானது இரண்டு தடவைகளைத்தாண்டக்கூடாது.
எனினும் நியாயமான ஜணமேற்படுமிடத்து வாக்கெண்ணும. அலுவலரின் தற்துணிபுக்கேற்ப மீளஎண்ணலை மேற்கொள்ளமுடியும். மேற்கொள்ளவேண்டும்.

By admin