அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

(டினேஸ்)

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு அம்பாறை  மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று முன்தினம்(7) நள்ளிரவு முடிவுபெற்றன. தற்பொழுது அமைதியான முறையில் பணிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும்

இம்மாவட்டத்தில் மொத்த வாக்குகள் 493742
மொத்த வாக்களிப்பு நிலையங்கள் 529
மொத்த வேட்பாளர்கள் 2837
மொத்த பெண் வேட்பாளர்கள் 642
மொத்த மன்றங்கள் 20 (2 மாநகர சபை 1 நகர சபை உட்பட)
மொத்த ஏற்று கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் 123
தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்கள் 378
தெரிவு செய்யப்படவுள்ள பெண் உறுப்பினர்கள் 91 போன்ற விபரங்கள் அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

By admin