மாமனிதர் சந்திரநேரு அவர்களின் 13 ஆவது நினைவேந்தல் திருக்கோவில் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது!

முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (8.2.2018) 13 வருடங்கள். திருக்கோவிலில் அமைந்துள்ள மாமனிதர் நேருவின் நினைவிடத்தில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அன்னாரின்  புதல்வரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன், இளைஞர்கள், பொதுமக்கள் எனப்பலர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மாமனிதர் சந்திரநேரு, மட் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் வன்னியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணம் செய்தபோது வெலிகந்தை பகுதியில் வைத்து சுட்டு  படுகொலை செய்யப்படார்கள்  இந் நிகழ்வு தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

By admin