ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை திருத்தப்பட கூடாது…….

ஈரான் அரசுத் தலைவர் ஹாசான் ரூஹானி 6ஆம் நாள் தெஹ்ரானில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் 200க்கும் மேலான செய்தியாளர்களைச் சந்தித்துரையாடினார்.

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையை திருத்தும் அமெரிக்காவின் கோரிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை மீண்டும் விவாதிக்கப்படவும் திருத்தப்படவும் கூடாது. பிற விவகாரத்துடன் அதனைத் தொடர்புபடுத்தவும் கூடாது என்று தெரிவித்தார். உடன்படிக்கையின் எதிர்காலம் உறுதியற்றது. ஆனால், உடன்படிக்கையை மீறும் முதல் நாடாக ஈரான் இருக்காது என்றும் அவர் கூறினார்.