நாளை காலை சிரேஸ்ட்ட தலைமைதாங்கும் அலுவலர்கள் சமுகமளிக்கவேண்டும்!
அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் துசித பி வணிகசிங்க!
-காரைதீவு  நிருபர் சகா-
 
அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சிபைத்தேர்தலில் கடமையாற்றவிருக்கும் சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் அனைவரும் நாளை(9) வெள்ளிக்கிழமை மு.ப. 8.30மணிக்கு அம்பாறை நகரசபை மைதானத்திற்கு சமுகமளிக்கவேண்டுமென மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான துசித பி வணிகசிங்க அறிவித்தல் வழங்கியுள்ளார்.
நகரசபைக்குரிய எச்எம்.வீரசிங்க விளையாட்டரங்கில் விசேடமாக அமையப்பெற்றுள்ள கருமபீடத்தில் உரிய விதிமுறையான நியமனக்கடிதம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் வாக்கு எண்ணும் கடமைக்கான நியமனக்கடிதமும் அந்தச்சந்தர்பத்தில் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிவுறுத்தலிலின்படி அங்கு உரியஆவணங்களோடு வாக்குப்பெட்டிகள் பொலிசார் சகிதம் உரிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் குறித்த வீதியால் செல்லவேண்டும். அன்றிரவு வாக்குச்சாவடியில் தங்கவேண்டுமென்பதால் அதற்கான பெட்சீட் பிரத்தியேக ஆடை டோர்ச் மேசைமணிக்கூடு ஆகியவற்றைக் கொண்டுவரவேண்டும்.
தேர்தல் தினத்தன்று காலை 7மணிமுதல் தொடர்ந்து மாலை 4மணிவரை வாக்களிப்பு சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாக்களிப்பு நிலையத்தின் முழுப்பொறுப்பும் நீங்கள்தான் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

By admin