சுயலாப அரசியலுக்காக எமது அமைப்பின் பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியிட்ட விஷமிகள்க;ல்முனை பிராந்திய தமிழ்  இளைஞர் சேனை கண்டணம்!

கல்முனை பிரதேசத்தில் நேற்று இரவு கல்முனை பிராந்திய இளைஞர் சேனையின் பெயரில் அரசியல் சுய இலாபங்களுக்காக வேட்பாளர்கள் தொடர்பாக அநாமதய துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி சுய இலாப அரசியல் ஆதாயம் தேடும் ஒரு விஷம கும்பல்  பிரசுரங்களை வெளியிட்டுள்ளமையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என கல்முனை பிராந்திய இளைஞர் சேனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஊடக அறிக்கை.07.01.2018

சாதி,மதம்,பிரதேசம்,அரசியல் சார்பு கடந்த கல்முனை,பாண்டிருப்பு,பெரியநீலாவணை,மணல்சேனை,நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு,துரைவந்தியமேடு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலை,கலாச்சார,கல்வி,பொருளாதார மேம்பாட்டு இளைஞர் அமைப்பான எமது அமைப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மக்கள் சேவையில் நம்பகத் தன்மையோடும் நடு நிலையோடும் வெளிப்படைத் தன்மையோடும் சேவையாற்றி வருகிறது,அந்த வகையில் நாம் சந்தித்த தற்காலத்தின் சிக்கல் நிலையான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களத்தில் சிக்கல் நிறைந்த வட்டாரமான கல்முனை 12ம் தொடர்பாக தமிழர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குமிடையில் நல்ல பலத்த ஒரு ஆரோக்கியமான போட்டி காணப்பட்டது இந்த 12ம் வட்டார ஆசனம் இரண்டையும் யார் கைப்பற்றுவது என்ற பலப் பரீட்சை நடைபெறும் வேளையில் நடுநிலையாக இருந்து நாமும் ஒரு பாரிய முயற்சியை முன்னெடுத்தும் அது ஒரு இணக்கப்பாடற்ற நிலையில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அந்த 12ம் வட்டாரம் தொடர்பாகவும் ஏனைய வட்டாரங்களிலும் எமது கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையானது எந்த கட்சிக்கோ சுயேட்சைக்கோ ஆதரவில்லாமல் நடு நிலையாகவே உள்ளது இறுதி வரையும் நடுநிலையாகவேதான் இருப்போம் என்றும் ஆனால் எமது சேனையின் அங்கத்தவர்கள் யாரையும் நாம் கட்டுப் படுத்தி அவர்களின் உரிமையில் அதிகாரம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் தத்தமது பகுதிகளில் அல்லது வேறு பகுதிகளிலும் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படுவது தொடர்பாக எமது சேனை தலையிடாது என்றும் அவ்வாறான வேளையில் அவர்களினால் வழங்கப்படும் ஆதரவுகள் அதற்கான பேச்சுக்கள் எதற்கும் எமது இளைஞர் சேனை பொறுப்பாகாது என்பதையும் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினால் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்களும் அறிக்கைகளும் தலைவர் திரு.தா.பிரதீவன் செயலாளர் திரு.அ.நிதான்சன் ஊடாக எமது ஊடகப் பேச்சாளர் திரு. க .டனிஸ்கரன் மூலமே வெளியிடப்படும் என்பதையும் கடந்த 05.02.2018 அன்றைய எமது ஊடக அறிக்கையில் தெளிபடுத்தியிருந்தோம் என்பதையும் கூறிக் கொள்வதோடு இதுவரையும் நாங்கள் எமது அமைப்பு சார்ந்து எதுவித துண்டுப் பிரசுரங்களையோ அறிவித்தல்களையோ அல்லது ஏனைய எதுவித வடிவங்களிலுமோ தேர்தல் தொடர்பான அல்லது வேட்பாளர்கள் தொடர்பான எதுவித விமர்சனங்களையுமோ வெளியீடுகளையுமோ அறிக்கைகளையுமோ வெளியிடவில்லை என்றும் இந்த தேர்தல் காலங்களில் இவ்வாறான எதுவித அநாமோதய வெளியீடுகளையும் வெளியிட மாட்டோம் என்பதையும் கூறிக் கொள்வதோடு அவ்வாறு ஏதும் நன்மையான காரியத்திற்காக வெளியிட வேண்டிய தேவை ஏற்ப்பட்டாலும் இது தொடார்பாக எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும்  அதன் பின்னர் தேவை ஏற்பட்டால் பொதுவாக  ஊடகங்களில் வெளியிடுவோம் எனவும் எனவும் கூறிக்கொள்வதோடு நேற்றைய தினம் 07.02.18 இரவு கல்முனை இளைஞர் சேனை எனும் பெயரில் ஒரு பிரசுரம் யாரோ விஷமிகளால் வெளியிடப்பட்டுள்ளது இது எமது அமைப்பில்லை என்பதையும் இவ்வாறான ஒரு தேவை எமக்குத் இல்லை என்பதையும் எமது அமைப்பு கல்முனை தமிழ் இளைஞர் சேனை இல்லை என்பதையும் எமது அமைப்பு கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை என்பதையும் கூறிக்கொள்வாதோடு சிலர் தமது வங்குரோத்து அரசியலுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் எதுவித அரசியல் நோக்கமுமற்ற நடுநிலையான மக்கள் செல்வாக்கு நிறைந்த மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட எமது அமைப்பைச் சிதைக்க வேண்டும் என்று எண்ணும் சுயநலவாதிகளினால்  மேற்கொள்ளப்படும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை கண்டிப்பதோடு இவ்வாறான செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறிக் கொள்கின்றோம்.

நன்றி
இந்த அறிக்கையும்
தலைவர் திரு.தா.பிரதீவன்
செயலாளர் திரு.அ.நிதான்சன்
ஊடாக ஊடகப் பேச்சாளர் திரு. க.டனிஸ்கரன் அவர்களால் வெளியிடப்படுகிறது.

By admin