கல்முனையில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இறுதி தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டம் கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் (7) நடைபெற்றது.

கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டார வேட்பாளர் சந்தரசேகரம் ராஜன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன், முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் 11 ஆம் வட்டார வேட்பாளருமான கென்றி மகேந்திரன், முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கு.ஏகாம்பரம், வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பெருந்தரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் சந்தரசேகரம் ராஜன், சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழரின் அதிக நிலப்பரப்பையும், அதிகமாக தமிழ் மக்களையும் உள்ளடக்கிய இந்த 12 ஆம் வட்டாரத்தில்  வாக்குகள் பிரியாமல் அதிக செல்வாக்குள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பு  வீட்டுச்சின்னத்திற்கு  ஒன்றிணைந்து வாக்களித்து மாற்றாருக்கு செல்லாமல் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் சந்திப்பு!

கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டனர். இக் கலந்துரையாடலில் கல்முனை விடயங்கள் தொடர்பாக கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

   

 

By admin