காரைதீவை சம்மாந்துறையுடன் இணைத்த ஆவணம் இதுதான்! இனி முடிவு  மக்களைப்பொறுத்தது!
 இறுதிக்கூட்டத்தில் சுயேச்சைக்குழுத்தலைவர் வேட்பாளர் நந்தகுமார் உரை.
 
(காரைதீவு   நிருபர் சகா)
 
காரைதீவை சம்மாந்துறையுடன் இணைத்தமை குறித்து சிலமக்கள்மத்தியில் ஒருவித ஜயம் இருந்தது. இதோ அந்த ஆவணம். இனியாவது இந்த  வரலாற்றுத் துரோகத்தைச்செய்த  த.தே.கூட்டமைப்பை இனங்கண்டுகொள்ளுங்கள். உங்கள் அனைத்து வாக்குகளையும் ரோசத்துடன்  தமிழனுக்காக ஊர்த்தீர்மானத்தின்படி இறங்கிய சுயேச்சைக்கு அளித்து காரைதீவான் என்ற தன்மானத்தைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
சர்ச்சைக்குரிய அந்த ஆவணத்தை  காட்டி காரைதீவு பிரதேசசபைக்காகப் போட்டியிடும் சுயேச்சைக்குழு 1 இன்   இறுதிநாள் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய சுயேச்சைக்குழு-1 இன் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார்  தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
காரைதீவில் இனிமேல் ஒரு எம்.பியோ மாகாணசபை உறுப்பினரோ வரக்கூடாது என்பதை மையமாகவைத்துத்தான் இந்த தமிழரசுக்கட்சியினர் தொகுதிப்பிரிப்பில் காரைதீவு சம்மாந்துறையுடன் இணைத்துள்ளார்கள். அதனைக்கூட இங்குள்ள ஒரு புத்திஜீவி எனதன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் விளம்பர வேட்பாளர் நியாயப்படுத்துகிறார்.காரைதீவை தாரை வார்க்கவில்லையாம். இப்போ என்ன சொல்லப்போகிறார்கள். ?
  எனவே இவர்கள் நாளை வந்து இனநல்லிணக்கம் கருதி நாம்காரைதீவை மாற்றானுடன் இணைந்துதான் ஆட்சிசெய்யவேண்டும் எனச்சொல்வார்கள். இங்குள்ளவர்கள் விரும்பாவிடினும் தலைமைகள்சொல்கின்றன. ஆகவே இணைகின்றோம் என்றுகூறி  தாரை வார்த்துக்கொடுப்பார்கள். இன்னுமொருவரில் தங்கியிருக்கும் கல்வியறிவற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஊரின் மரியாதையை சிதைக்கவேண்டாம்.
மற்றநீலக்கட்சியைப்பற்றி சொல்லத்தேவையில்லை.  அவர்களுக்கு விழும் ஒன்றிரண்டு வாக்குகள்கூட அது மாற்றானின் தெரிவுக்குத்தான் வழிவகுக்கும்.
எனவே காரைதீவு காரைதீவாகத்தான் தொடர்ந்து இருக்கவேண்டுமென்றால் சுயேச்சைக்கு மட்டுமே வாக்களியுங்கள். ஓரிரண்டு ஆசனங்கள் என்றால் எமக்கு வாக்களியாதீர்கள். குறைந்தது 6ஆசனங்களையாவது சுயேச்சைக்கு வழங்குவதானால் மட்டும் எமக்கு வாக்களியுங்கள்.அல்லது ஊரைத்தாரைவார்த்துக்கொடுக்கவேண்டுமானால் ஏனையவர்களுக்கு வாக்களியுங்கள்.
காரைதீவின் ஊர்த்தீர்மானம்  ஒருமைப்பாடு கருதி மரியாதையின் நிமித்தம் இந்தப்பக்கமே வராமலிருக்கும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் மற்றும் ரெலோ உபமுதல்வர் ஹென்றிமகேந்திரன் ஆகியோருக்கு காரைதீவுமக்கள் சார்பில் நாம் நன்றிதெரிவிக்கின்றோம்.
உங்களுக்கு வேண்டுமென்றால் அடுத்தடுத்த மாகணசபை அல்லது பாராளுமன்ற தோத்லுக்கு உதவிசெய்ய காரைதீவு மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் எமது ஊர்த்தீர்மானத்தைக் குழப்பிய அவருக்கோ  அல்லது அவர் பின்னால்திரியும் பினாமிகளுக்கு எமது ஆதரவு இனிமேல் கனவிலும் கிடையாது. இருந்ததையும் இழந்ததுதான் மிச்சம்.என்றார்.
?????????????
?????????????
?????????????
?????????????

By admin