கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்ற புற்றுநோய் தின சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு!

உலக  புற்றுநோய் தினமான மாசி 4ம் திகதியை முன்னிறுத்தி கல்முனை  ஆதாரவைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் ,சுகாதார கல்விப் பிரிவும், தொற்றுநோய்பிரிவினரும் இணைந்து சிறப்பு நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

 

இந்நிகழ்வானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியர் W.D.I Shama Gunathilaka அவர்களின் சிறப்பு  விழிப்பூட்டல் கருத்தரங்கு மூலம் இடம்பெற்றது.
 நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் கூறுகையில் நிபுணர் Shama Gunathilaka அவர்கள் தான் ஒரு நிபுணர் என்று மட்டுமல்லாமல் கடமைக்கு அப்பால் மனிதநேயம், நோயாளியின் நலன்கள், நோயாளியின்  எதிர்காலம், நோய்த்தடுப்பு , நோயாளியின் தேவை, நோயாளியை எவ்வாறு பேணுதல் என்ற விடயங்களில் மிகுந்த அக்கறை உடையவர் எனவும் . இவரின் விழிப்பூட்டல் மூலம் நாம் அனைவரும் நன்மை பெறலாம் எனவும் கூறினார்.
நிகழ்வில் ஓர் புற்று நோயாளியின் அறிகுறிகள் என்ன , சிகிச்சையின் முக்கியத்துவம், எவ்வாறு சிகிச்சையளிப்பது, முக்கியமாக அவரிற்கு தேவையான ஓர் அரவணைப்பு
 அவசியம் எனவும் புகைப்படம் ஒன்றின் மூலம் காண்பித்தார்.மேலும் பல விளக்கங்களும் தொடர்ந்தன.
 இவ்வாறான செயல்திட்ட நிகழ்வுகள் கல்முனை ஆதாரவைத்தியசாலையில்  தொடராக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வைத்திய அத்தியட்சகர் அவர்களின் சிறப்பு இயல்புகளில் இவ்வாறான நிகழ்வுகளுக்கான முக்கியத்துவமும் ஒரு சிறப்பம்சமாகும்.

By admin