காரைதீவு மாற்றான் கைகளுக்கு போகவேண்டுமானால் எங்களுக்கு வாக்களிக்கவேண்டாம்!
நேற்றைய இறுதிக்கூட்டத்தில் சுயேச்சைவேட்பாளர் நந்தகுமார் உரை.
 
(காரைதீவு   நிருபர் சகா)
 
காரைதீவு மாற்றான் கைகளுக்கு போகவேண்டுமானால் தயவுசெய்து எங்களுக்கு வாக்களிக்கவேண்டாம். காரைதீவை தக்கவைக்கவேண்டுமென்பதற்காகவே ஊர்மக்களின் தீர்மானத்திற்கமைவாகவே நாம் சுயேச்சையில் போட்டியிடநேர்ந்தது. காரைதீவு மாற்றான் கைகளுக்கு போகாமலிருப்பதானால் எமக்கு வாக்களியுங்கள்.இன்றேல் யாருக்காவது வாக்களியுங்கள்.
காரைதீவு பிரதேசசபைக்காகப் போட்டியிடும் சுயேச்சைக்குழு 1 இன் தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று  பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய சுயேச்சைக்குழு-1 இன் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் ஆக்ரோசத்துடன்  தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
காரைதீவில் இனிமேல் ஒரு எம்.பியோ மாகாணசபை உறுப்பினரோ வரக்கூடாது என்பதை மையமாகவைத்துத்தான் இந்த தமிழரசுக்கட்சியினர் தொகுதிப்பிரிப்பில் காரைதீவு சம்மாந்துறையுடன் இணைத்துள்ளார்கள். எனவே இவர்கள் நாளை வந்து இனநல்லிணக்கம் கருதி நாம்காரைதீவை மாற்றானுடன் இணைந்துதான் ஆட்சிசெய்யவேண்டும் எனச்சொல்வார்கள். இங்குள்ளவர்கள் விரும்பாவிடினும் தலைமைகள்சொல்கின்றன. ஆகவே இணைகின்றோம் என்று தாரை வார்த்துக்கொடுப்பார்கள்.
மற்றநீலக்கட்சியைப்பற்றி சொல்லத்தேவையில்லை.  அவர்களுக்கு விழும் ஒன்றிரண்டு வாக்குகள்கூட அது மாற்றானின் தெரிவுக்குத்தான் வழிவகுக்கும்.
எனவே காரைதீவு காரைதீவாகத்தான் தொடர்ந்து இருக்கவேண்டுமென்றால் சுயேச்சைக்கு மட்டுமே வாக்களியுங்கள். அல்லது தாரைவார்த்துக்கொடுக்கவேண்டுமானால் ஏனையவர்களுக்கு வாக்களியுங்கள்.
இந்த விவசாய அமைச்சர் இந்த சம்பந்தர் ஜயா எல்லாம் கடந்த 5வருடங்களாக எங்கே சென்றிரந்தார்கள். தேர்தல் என்றால்மட்டும் வருகிறார்களகள்.
அண்மையில் காரைதீவில் நடைபெற்ற த.தே.கூ. தேர்தல் பிரச்சார பகிரங்கமேடையில் ஒரு எம்.பி. அநாகரிகமான கீழ்த்தரமான வார்த்தைகளை பொதுமக்கள் முன் பேசியுள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி தேர்தல் முடிந்ததும் காரைதீவார் கூட்டமைப்புதவிர்ந்த ஏனைய வேட்பாளர்களை தும்புத்தடியால் விரசுவார்கள் என்று பகிரங்கமாகக்கூறியுள்ளார். இங்குள்ள வேட்பாளர்கள் அனைவரும் காரைதீவார்கள்தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
தேர்தலுக்காக எம்மவர் பிரிந்துகேட்கின்றார்களேதவிர எமது மண்ணைவிட்டுக்கொடுக்க எந்தக்கட்டத்திலும் நாம் தயாரில்லை.  எங்கேயோஇருந்துவந்து காரைதீவாரை காரைதீவான் தும்புக்கட்டால் அடித்துவிரசவேண்டும் என்றுசொல்வதற்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும். உடனடியாக அவர் அந்த சொற்பிரயோகத்தை வாபஸ் பெற்று மன்னிப்புக்கேட்கவேண்டும் இன்றேல் உணர்வுள்ள எந்தக்காரைதீவானும் த.தே.கூட்டமைப்பிற்கு ஒருவாக்குத்தானும் அளிக்கக்கூடாது என்று அன்பாகக்கேட்டுக்கொள்கின்றேன்.
தேர்தல் என்றால் அனைவரும் வெல்லமுடியாது. அதற்காக இந்தக்கேவலமான சொற்பிரயோகத்தை பகிரங்கமேடையில் பேச ஒரு எம்.பி. வெட்கப்படவில்லையா? அது அவரது வளர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அதை காரைதீவில் காட்டவேண்டாம். உங்களை நீங்கள் சொன்ன கருவியால் விரச எமக்கு நேரமெடுக்காது.
சாராயத்திற்கும் தகரத்திற்கும்பணத்திற்கும் உங்களுக்கு பின்னால்திரியும் பினாமிகள் போல முழுக்காரைதீவார்களையும் எண்ணவேண்டாம்.
எங்களுக்கும் அப்படி பேச நேரமெடுக்காது. ஆனால் நாம் பண்புள்ளவர்கள். நாகரீகமானவர்கள்.சுவாமி விபுலாநந்தரின் வழித்தோன்றல்கள்.
இந்தவிடயத்தில் காரைதீவாஎல்லாம் ஒரு குடையின்கீழ் சங்கமித்து தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்.

By admin