ஹொலிவூட் வலம் : கோல்டன் குளோப் விருதை வென்ற அமெரிக்க தமிழர்

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக மிக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘The Master Of None’ தொடரில் நடித்த அஸிஸ் இஸ்மாயில் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது. ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

75-வது கோல்டன் குளோப் அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் குளோப் எனும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 75-வது கோல்டன் குளோப் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. 2015-ல் இருந்து ஒளிபரப்பாகிவரும் ‘The Master Of None’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் அன்சாரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அஸீஸ் இஸ்மாயில் அன்சாரியின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால், அஸீஸ் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில்தான் என்று தெரிவித்துள்ளார்.