பாண்டிருப்பில் இன்று மாலை (7) தமிழர் விடுலைக் கூட்டணியின் பொதுக்கூட்டம்!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் சின்னத்தில் போட்டியிடும் பாண்டிருப்பு வேட்பாளர்களை ஆதரித்து இன்று (7) மாலை 5 மணிக்கு பாண்டிருப்பு அருச்சுனர் வீதியில் கிருஷ்ணபிள்ளை அருணன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பாண்டிருப்பு 1 ஆறாம் வட்டாரத்தில் காத்தமுத்து கணேஸ், பாண்டிருப்பு 2 பத்தாம் வட்டாரத்தில் செல்லப்பா மகேந்திரராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இக் கூட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்த சங்கரி ,நாடாளுமன்ற உறுப்பினர் சிசவக்தி ஆனந்தன். வடமாகாணசபை உறுப்பினர் சிவகரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

By admin