அவுஸ்திரேலியா : அவுஸ்திரேலியா அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டக் போலிஞ்சர் ஓய்வு..

அவுஸ்திரேலியா : அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டக் போலிஞ்சர் (36), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸி. அணிக்காக 12 டெஸ்டில் விளையாடி உள்ள போலிஞ்சர் 50 விக்கெட் மற்றும் 39 ஒருநாள் போட்டிகளில் 62 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இது தவிர 9 டி20 போட்டியிலும் விளையாடி உள்ளார். 2009-10ல் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், ஆஸி. அணியில் புறக்கணிக்கப்பட்ட பிறகு ஐபிஎல், பிக் பாஷ் போன்ற உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வந்தார். முதல்தர போட்டிகளில் 411 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ள போலிஞ்சர், சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஷ் தொடரிலும் விளையாடி இருந்தார்.