சீனா : சீனாவின் அரச சபை உறுப்பினர் யாங் ஜியே ச்சியின் அமெரிக்கப் பயணம்…

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக் டில்லர்சனின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன அரச சபை உறுப்பினருமான யாங் சியே ச்சி பிப்ரவரி 8, 9 ஆகிய நாட்களில் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்தார்.

அண்மையில், சீனாவும் அமெரிக்காவும் பல்வேறு துறைகளுடனான தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும், இப்பயணத்தின் போது, சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர் என்றும் கெங் சுவாங் தெரிவித்தார்.