தர்மேந்திரா ஞாபகார்த கிண்ணத்தை நற்பிட்டிமுனை விவேகானந்தா அணி வெற்றிபெற்றது!

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய தர்மேந்திரா ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் விவேகானந்தா அணி இறுதிப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவிகரித்தது.

10 ஓவர்கள்  கொண்ட இச்சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனையை சேர்ந்த விவேகானந்தா சுப்பர் ஸ்டார்.  வாரணம் நியுஸ்ரார் ஆகிய நான்கு அணிகள் போட்டியிட்டன. இதில் இறுதிப் போட்டிக்கு விவேகானந்தா அணியும் வாரணம் அணியும் தெரிவாகி போட்டியிட்டதில் முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வாரணம் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தனர்.

-நிதான்-

 

By admin