கார்மேல் பற்றிமா பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தளபாடங்கள் வழங்கி வைப்பு!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு 2,40,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் (கதிரை, மேசை)  பழைய மாணவர் சங்கத்தால் நேற்று பாடசாலை அதிபர்  அருட்சகோதரர் சந்தியாகு அவர்களிடம்   வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் கென்றி அமல்ராஜ் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இலண்டனில் வசிக்கும் Dr, சர்வேஸ்வரன் அவர்களின் முயற்சியால்  Assist RR-UK எனும் நிறுவனம் மூலம் தளபாடங்களுக்கான நிதி பெறப்பட்டு இரண்டு இலட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-சிந்துஜன் –

   

By admin