இறந்தும் இறவாத கொடைவள்ளல் பேராசிரியர் வரகுணம்!
காரைதீவு பொதுஅமைப்புகளின்  அனுதாபச்செய்திகள்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
பலகோடிருபா பெறுமதியான காணியை எமது காரைதீவு பிரதேசவைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கிய செம்மனச்செம்மல் பேராசிரியர் த.வரகுணம் இன்றில்லை. இறந்தும் இறவாத கொடையாளி கல்விமான் வரகுணம் அவர்களின் மறைவு பாரிய வெற்றிடத்தைத்தோற்றுவித்துள்ளது. அன்னார் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு காரைதீவு பிரதேசவைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை  அபிவிருத்திக்குழு மற்றும் இந்துசமயவிருத்திச்சங்கம் என்பன அனுதாபச்செய்தியினை வெளியிட்டுவைத்துள்ளன.
அன்னாரின் அனுதாபஅஞ்சலி பதாதைகள் வைத்தியசாலை முன்றலில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இதேவேளை காரைதீவின் பொதுநல அமைப்புகள் பல கூட்டாக   அனுதாபச்செய்திகளை வெளியிட்டுள்ளன.
அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காரைதீவைப்பொறுத்தவரையில் டாக்டர் த.வரகுணம் ஒரு சிரஞ்சீவி. கொப்பி பென்சில்களை வழங்கிவிட்டு ஊடகங்களில் விளம்பரம் தேடும் இன்றையகாலகட்டத்தில் பலகோடிருபா பெறுமதியான காணியை இவ்வாறு  தான் காரைதீவில் பிறக்காவிட்டாலும் தான்நேசித்த சுவாமி விபுலானந்தருக்கும் இ.கி.மிசனுக்கும் கௌரவமளிக்கஎண்ணி இந்தக்கொடையை வழங்கியமையானது நினைத்துப்பார்க்கமுடியாததொன்று.அதற்கு அவர் எந்தப்பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை. தன்னலமற்ற அவரது இந்தச்சேவைக்கு நிகரில்லை.
சுனாமிக்குப்பின் மெர்லின் என்ற ஸ்தாபனம் 84.2 மில்லியன்ருபா செலவில் வைத்தியசாலை அமைக்கமுன்வந்தபோது காணிஇல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தகாலை தாமாக முன்வந்து இந்த அரும்பெரும் பொக்கிசத்தை காரைதீவு மக்கள் நலன்கருதி வழங்கினார்.
காரைதீவு மண்ணிருக்கும்வரை டாக்டர் வரகுணத்தின் நாமமும் நின்றுநிலைத்திருக்குமென்பதில் ஜயமில்லை.
அன்னாரது மறைவுக்கு எமது வைத்தியசாலை மற்றும் ஊhபொதுநல அமைப்புகள் பொதுமக்கள் அனைவரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
 

By admin