அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை சிறப்புவாய்ந்தது என்?
எதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தல் கலப்புமுறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால்  முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரசபை சிறப்பு வாய்ந்ததென்று சொல்லப்படுகின்றது.
மாவட்டத்திலுள்ள 20 சபைகளிலும் அதிகூடிய கட்சிகள் அதிகூடிய வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதும் அதிகூடிய கட்டுப்பணம் செலுத்தப்பட்டதும்  கல்முனை மாநகரசபையிலே என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் அதிகூடிய தொகையில் அதாவது 10பேர் தெரிவாகவேண்டும் என்ற நியதியும் இங்குள்ளது.
கல்முனை மாநகரசபை!
கல்முனை மாநகரசபையானது 43வேட்பாளர்களைக்கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 10.
இம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
கல்முனை மாநகரசபை தேசியமட்டத்தில் முக்கியத்துவம்பெற்றுப் பேசப்பட்டது. அதற்குக்காரணம் அங்குள்ள சாய்ந்தமருது பிரதேசம். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் இத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனால் அவர்கள் கட்சிகளை வெறுத்து சுயேச்சையில் நிற்க ஊர்த்தீர்மானம் எடுத்து தீவீரமாகச் செயற்பட்டனர்.
தமது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சியுடன் கைகோர்த்து கல்முனை மாநகரசபை ஆட்சியதிகாரத்தை அமைப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள பள்ளிவாசல் நிருவாகம் தேர்தல் செயற்பாடுகளைக் கையாளுகின்றது. பள்ளிவாசலே அரசியல்களமாகவும் உள்ளதென்று எதிரணியினர் குற்றம் சாட்டிவந்த நேரத்தில் புதனன்று காலை பள்ளிவாசல் நிருவாகம் கலைக்கப்பட்டு இடைக்கால நிருவாகம் தோற்றுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கஅம்சமாகும்.
இதேவேளை இங்குள்ள 7வட்டாரங்கள் தமிழர் பிரதேசங்களாகும். அவற்றில் ஒன்று இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகும். கல்முனை நகரை உள்ளடக்கிய 12ஆம் வட்டாரம் அது. அங்கு தலா 4ஆயிரம் வாக்காளர்கள் இரு தரப்பிலும் உள்ளனர். எந்தக்கட்சி ஒருவாக்கால் கூடுகிறதோ அக்கட்சிக்கே இரு உறுப்பினர்களும் கிடைக்கும். எனவே அங்கு பலத்த போட்டி இடம்பெற சாத்தியமிருக்கிறது.
அதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வட்டாரம் விகிதாசாரம் உள்ளடங்கிய கலப்பு தேர்தல்  முறையில்    வட்டாரம் மூலம் 22 உறுப்பினர்களும் விகிதாசாரமுறை மூலம் 18 உறுப்பினர்களுமாக  மொத்தம் கல்முனையில் 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கல்முனை தமிழ் கல்முனை முஸ்லிம் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய கல்முனை மாநகரசபைக்கு 40 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
அதற்காக 43 வேட்பாளர்கள் களத்தில்  போட்டியிடவுள்ளனர்.
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ்த்தரப்பில் 7வட்டாரங்களுடாக  8உறுப்பினர்கள் வட்டாரமுறையில் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
கல்முனை மாநகர சபை  தேர்தல் வட்டாரங்களும் வாக்காளர் எண்ணிக்கையும் உறுப்பினர்களும் கிராமசேவர் பிரிவு எண்ணிக்கையும்.
1ம் வட்டாரம் 3567 -1 (பெரியநீலாவணை- தமிழ்) -4 கிராம சேவகர் பிரிவுகள்
2ம் வட்டாரம் 2946 -1 (பெரியநீலாவணை -தமிழ்) -2 கிராம சேவகர் பிரிவுகள்
3ம் வட்டாரம் 2251 -1 (மருதமுனை) -2 கிராம சேவகர் பிரிவுகள்
4ம் வட்டாரம் 4173 -1 (மருதமுனை) -4 கிராம சேவகர் பிரிவுகள்
5ம் வட்டாரம் 3312 -1 (மருதமுனைபாண்டிருப்பு ) -3 கிராம சேவகர் பிரிவுகள்
6ம் வட்டாரம் 2429 -1 (பாண்டிருப்பு -தமிழ்) -4 கிராம சேவகர் பிரிவுகள்
7ம் வட்டாரம் 3635 -1 (நற்பட்டிமுனை -) -5 கிராம சேவகர் பிரிவுகள்
8ம் வட்டாரம் 2561 -1 (சேனைக்குடியிருப்பு -தமிழ்) -3 கிராம சேவகர் பிரிவுகள்
9ம் வட்டாரம் 2512 -1 (நற்பட்டிமுனை -தமிழ்) -3 கிராம சேவகர் பிரிவுகள்
10ம் வட்டாரம் 3299 -1 (பாண்டிருப்பு -தமிழ்) -3 கிராம சேவகர் பிரிவுகள்
11ம் வட்டாரம் 1981 -1 (கல்முனை -தமிழ்) -2 கிராம சேவகர் பிரிவுகள்
12ம் வட்டாரம் 8725 -2 (கல்முனை -தமிழ் 4517) -6 கிராம சேவகர் பிரிவுகள்
(கல்முனைக்குடி -முஸ்லிம் 4208)-4 கிராம சேவகர் பிரிவுகள்
13ம் வட்டாரம் 2656 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
14ம் வட்டாரம் 3397 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
15ம் வட்டாரம் 2988 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
16ம் வட்டாரம் 2528 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
17ம் வட்டாரம் 2680 -1 (கல்முனைக்குடி-முஸ்லி) -2 கிராம சேவகர் பிரிவுகள்
18ம் வட்டாரம் 2893 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
19ம் வட்டாரம் 3037 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
20ம் வட்டாரம் 2891 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -3 கிராம சேவகர் பிரிவுகள்
21ம் வட்டாரம் 3835 -1 (சாய்ந்தமருது-முஸ்லி) -4 கிராம சேவகர் பிரிவுகள்
கல்முனை மாநகர சபை தேர்தல் பற்றிய சில தகவல்கள்.
 ♦.மொத்த வட்டாரங்கள் தொகை – 23
 ♦.இரட்டை அங்கத்தவர் வட்டாரம் – 01
(12 ஆம் வட்டாரம்)
 ♦வட்டாரம் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளோர் – 24 பேர்.
 ♦விகிதாசார பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளோர் – 16 பேர்.
 ♦போட்டியிடும் வேட்பாளர் தொகை – 559
 ♦9 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அவையாவன.
1.ஐ.தே.கட்சி
2.ஸ்ரீ.ல.சு.கட்சி
3.இலங்கை தமிழரசுக் கட்சி
4.அ.இ.ம.காங்கிரஸ்
5.தேசிய காங்கிரஸ்
6.த.வி.கூட்டணி
7.மக்கள் விடுதலை முன்னணி
8.நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
9.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
 ♦.04 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
 ♦.வாக்காளர்களின் எண்ணிக்கை – 42280
 ♦.மொத்த சனத்தொகை – 74946
 ♦.தெரிவு செய்யப்பட வேண்டிய பெண் உறுப்பினர் தொகை – 10
 ♦.ஒரு கட்சிக்கு என வட்டார பட்டியலுக்கு என அனுப்பப்பட்ட பெண் வேட்பாளர்களின் தொகை – 04 (10மூ படி)
விகிதாசாரப்படி – 09 பேர். (50 துடன் ஒன்று கூட்டியதன் படி)
 ♦.போட்டியிடும் பெண்களின் தொகை – 13
 ♦.அம்பாறை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர்.
 ♦.20 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சி / சுயேச்சைக்குழு ஆட்சியை அமைக்கலாம்.
 ♦.இன விகிதாசாரப்படி தமிழர்களுக்கு இங்கு 12 ஆசனங்கள் கிடைக்க வேண்டும்.
இதில் மயில் சின்னத்தில் ரிசாட் கட்சிற்கு பெண் விகிதசாரத்திற்காக பெண் வேட்பாளர் சகணபதிப்பிள்ளை புவனேஸ்வரி மற்றைய தமிழரான ஜெயசிங்கா ரவி ஜ.தே.கட்சியில் போட்டியிடுகின்றார்.
கல்முனை மாநகரசபையை தனியாக ஒரு கட்சி கைப்பற்றி ஆட்சியதிகாரத்தை பெறும் என்ற நம்பிக்கை வலுவாக குறைந்துள்ளது. எனவே கூட்டாட்சிதான் அமையப்பெறவேண்டும். யார் யார் சேர்ந்து கூட்மைப்பது என்பது தேர்தல் பெறுபேற்றிலிருந்தூன் தெரியவரும்.
 பேரம்பேசல்கள் உரிமைப்பிரச்சினைகள் பல பேசுபொருளாகஅமையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
 
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர் 

By admin