கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஊடக அறிக்கை.05.01.2018

சாதி, மதம், பிரதேசம், அரசியல் சார்பு கடந்த கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மணல்சேனை. நற்பிட்டிமுனை. சேனைக்குடியிருப்பு. துரைவந்தியமேடு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட  கலை,கலாச்சார,கல்வி,பொருளாதார மேம்பாட்டு இளைஞர் அமைப்பான எமது அமைப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மக்கள் சேவையில் நம்பகத் தன்மையோடும் நடு நிலையோடும் வெளிப்படைத் தன்மையோடும் சேவையாற்றி வருகிறது.

இந்நிலையில் கடந்த பொங்கல் நிகழ்வோடுதான் நாம் உலகளவில் பிரபலமடைந்திருந்தோம் அதனால் மக்கள் பார்வையும் எதிர்பார்ப்பும் எம்மீது அதிகரித்திருந்தது அந்த வகையில் நாம் சந்தித்த தற்காலத்தின் சிக்கல் நிலையான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களத்தில் சிக்கல் நிறைந்த வட்டாரமான கல்முனை 12ம் தொடர்பாக தமிழர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குமிடையில் நல்ல பலத்த ஒரு ஆரோக்கியமான போட்டி காணப்பட்டது இந்த 12ம் வட்டார ஆசனம் இரண்டையும் யார் கைப்பற்றுவது என்ற பலப் பரீட்சை நடைபெறும் வேளையில் நாமும் ஒரு பாரிய முயற்சியை முன்னெடுத்தும் அது ஒரு இணக்கப்பாடற்ற நிலையில் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக மக்கள் எதுவித குழப்பமும் அடையாமல் தயவுசெய்து தமது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் உங்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் உச்சக்கட்டமான வாக்களிப்பை செய்யுமாறும் இது உங்கள் உரிமையும் கடமையுமாகும் என்பதையும் கூறிக் கொள்கின்றோம்.

 இந்நிலையில் அந்த 12ம் வட்டாரம் தொடர்பாகவும் ஏனைய வட்டாரங்களிலும் எமது கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையானது எந்த கட்சிக்கோ சுயேட்சைக்கோ ஆதரவில்லாமல் நடு நிலையாகவே உள்ளது இறுதி வரையும் நடுநிலையாகவேதான் இருப்போம் என்றும் ஆனால் எமது சேனையின் அங்கத்தவர்கள் யாரையும் நாம் கட்டுப் படுத்தி அவர்களின் உரிமையில் அதிகாரம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் தத்தமது பகுதிகளில் அல்லது வேறு பகுதிகளிலும் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படுவது தொடர்பாக எமது சேனை தலையிடாது என்றும் அவ்வாறான வேளையில் அவர்களினால் வழங்கப்படும் ஆதரவுகள் அதற்கான பேச்சுக்கள் எதற்கும் எமது இளைஞர் சேனை பொறுப்பாகாது என்பதையும் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினால் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்களும் அறிக்கைகளும் தலைவர் திரு.தா.பிரதீவன் செயலாளர் திரு.அ.நிதான்சன் ஊடாக எமது ஊடகப் பேச்சாளர் திரு. க .டனிஸ்கரன் மூலமே வெளியிடப்படும் என்பதையும் கூறுகிறோம்.
நன்றி
இந்த அறிக்கை (05.02.2018 )
தலைவர் திரு.தா.பிரதீவன்
செயலாளர் திரு.அ.நிதான்சன்
ஊடாக ஊடகப் பேச்சாளர் திரு. க.டனிஸ்கரன் அவர்களால்  வெளியிடப்படுகிறது.

By admin