மகிந்தவை  தேசியத்தலைவர் என்றவர் சம்பந்தர் :எனின் நாம் ஜனாதிபதி அணியில் சேர்வது குற்றமா?
காரைதீவின் சு.கட்சி வேட்பாளர் காண்டீபன் முழக்கம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
 கை கொண்டு எம்மினத்தை வீழ்த்திய மகிந்த ராஜபக்ஷவை தேசியத்தலைவர் என்றவர் த.தே .கூ. தலைவர் சம்பந்தர் ஐயாதான் . அவருடன் ஆட்சி அமைக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் . நிலைமை அப்படியிருக்க  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் நாங்கள் இணைந்திருப்பது துரோகமா?
இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் காரைதீவு பிரதேசசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துலிங்கம் காண்டீபன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
 நாம் ஜனாதிபதி அணியில் இணைந்தது துரோகம் என்றால் உங்கள் கூட்டமைப்பினர்  இந்த அரசிடம் இரண்டு கோடி வாங்கியது தொடக்கம்  சொகுசு மாளிகை வாங்கியது  சொகுசு வாகனம் வாங்கியது  ஆட்சி அமைக்க முண்டு கொடுத்துகொண்டிருப்பது  எதிர்க்கட்சி தலைவர் பதவியை வாங்கியது  குழுக்களின் பிரதித்தலைவர் பதவி வாங்கியது உங்கள் தலைவர்களது பிள்ளைகளுக்கு உயர்பதவி பெற்றமை  விமானத்தில் சொகுசுஇருக்கையில் செல்வது இன்னமும் முண்டுகொடுத்க்கொண்டு நிற்பது சம்பந்தனும் சுமந்திரனும்தான் ?  இவைகள் துரோகம் இல்லையா ?
ஒரு அடிமட்ட தொண்டன் ஏழை மக்களின் நலன் கருதி ஜனாதிபதியின் கட்சியில் இணைந்தால் மட்டும் துரோகமா ?
 ஆண்டபரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை என்கிறார்கள். உண்மை. குறைகள் அதிகம். கைப் புண்ணிற்கு என்ன கண்ணாடியா தேவை ?  கூட்மைப்பு ஒன்றுமே செய்யவில்லை . வாக்கு போட்ட மக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். குடல் காய்கின்றனர்  ஏழைகள் பட்டினியால் வாடுகின்றனர்  விடுதலை பெற்ற போராளிகளின் வாழ்வாதாரம் பற்றி சிந்தனை இல்லை  சிறையிலுள்ள போராளிகள் பற்றி சிந்தனை இல்லை  சிறு சிறு சலுகைகளுக்காக பலர் மதம் மாறிக்கொண்டிருக்கின்ரார்கள் அதை கவனிப்பார் இல்லை  இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்க மாட்டார்கள்.அபிவிருத்தி பற்றி சிந்திக்க மாட்டார்கள்மதி கெட்ட கூட்டத்துக்கு த.தே.கூட்டமைப்பென்று பெயர் வேறு . இந்தசீலத்தில் மீள ஆள்வதா?
நாம் வக்களித்த எம்.பி. 3வருடத்தின்பின்னர் காரைதீவுக்கு வருகிறார். இன்றைய குழப்பநிலைக்கு காரணம் அவர்தான். காரைதீவு மாற்றான்கைக்குப் போகுமென்றால் அதற்குரிய பொறுப்பை அவரும் அவருக்கு பின்னால் திரிகின்ற துரோகக்கும்பலுமே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது… உண்மையில் துரோகிகள் அவர்கள்தான்.
 80ஃ90 களில் பல வன்செயல்கள்  அழிவுகளில் இருந்து ஊரைக் காப்பாற்றியவர்கள் ஆயிரம் ஆயிரம் போராளிகள்  அவர்களின் கல்லறை மீதே காரைதீவு தலைநிமிர்ந்து நிற்கின்றது .மாறாக கூட்டமைப்பால் இதுவரை காரைதீவில் சாதித்தது என்ன? ஒரு குடிமகனுக்கு  ஒருவேல வாங்கிகொடுக்கமுடிந்ததா? ஒரு அபிவிருத்திவேலை செய்யமுடிந்ததா? இறுதியாக  எம்பிக்கிடைதத் வீதிகள் எங்கு போடப்பட்டன? அனைத்திதும் அக்கரைப்பற்pற்கு அப்பால். காரைதீவில் ஒரு வீதியைப்போமுடிந்ததா? அந்த வீதி கொந்தராத்தைக்கூட தமிழனிடம் கொடுக்கவில்லை. வாக்குப்போட மட்டும் தமிழன் தேவை. ஆனால் கொந்தராத்துச்செய் மற்றவர் வேண்டும். ஏன் பொக்கட் நிரப்ப.. இவர்களால் காரைதீவு பறிபோகும் நிலையில் உள்ளது . யாரிடம்கேட்டு காரைதீவை சம்மாந்துறைக்கு விற்றீர்கள்? இவையெல்லாம் இங்குள்ள முக்கியஸ்தர்களுக்கு தெரியுமா? எதுவுமே தெரியாது ஆனால் வக்காலத்து மட்டும் வாங்குவார்கள்.நாம் தூய கட்சி. சாராயம் வழங்கமாட்டோம் என்பார்கள். இறங்கு என்னநடக்கிறது. தினமும்  சாராயம். தகரம் அரிசி. இதெல்லாம் இவ்வளவுநாளும் எங்கெ இருந்தது?
 கூட்டமைப்பினர் பதினைந்து வருடமாக மக்களை சுரண்டி சுரண்டி பிச்சைககாரனாக்கி வைத்துள்ளார்கள் .எனவே  நாங்கள் சுரண்டுவதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை .
நான்  கறுப்புப் பணம் பெற்றுக்கொண்டதாக கூறுகிறார்கள்.   எனக்கு கறுப்புப் பணத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் தெரியாது நான்  நேர்மையாக சம்பாதித்த பணமே என்னிடம் உள்ளன .வெளிநாட்டில் நம்மவர் கஸ்ட்டப்பட்டுஉழைத்தனுப்பும் பணத்தில் நான் வாழவில்லை. அவ்வாறு நான் கறுப்புப் பணம் பெற்றதை நீங்கள் நிரூபித்தால் இப்போதே நான் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொள்கின்றேன் .புலம் பெயர் அமைப்புக்களிடம் இருந்து நீங்கள்தான் பணம் பெறுகின்றீர்கள் . மீனவர் சங்கத்திற்கு வந்த ஐஸ் தொழிற்லையை நீங்கள் தனியாக பயன்படுத்துகின்றீர்கள் . தேர்தலுக்கென்றே வெளிநாட்டுக்காசை  இங்கு கிள்ளித்தெறித்து அதனை வாசியான ஊடகங்களிலும் முகநூலிலும் இட்டு விளம்பரம் தேடினீர்கள்.
தேர்தலுக்கு தேர்தல் வந்த இங்கள்ள  மக்களை உசுப்பேற்றிவிட்டுச்செல்வார்கள். பாவம் மக்கள். உள்ளுராட்சித்தேர்தலுக்கு சம்பந்தன் ஜயா மாவை அண்ணன் வந்த சிhத்திரம் உண்டா? இம்முறை வங்குரோத்துதனம். அதுதான் அவர்களும் வந்து சர்வதேசம் பற்றிப் பேசிவிட்டுச்செல்கிறார்கள். காரைதீவுக்கு என்ன செய்வோம் என்று ஒரு வார்த்தைகூட கூறவில்லை. இவர்களை இனனும் காரைதீவார் நம்புவார்களா? வெற்றி நமதே .பொறுத்திருஙக்ள்

By admin