கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பு!

கல்முனை கார்மேல்  பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கூட்டம் பாடசாலைக் கட்டிடத்தில்  (3) சங்க செயலாளர் கென்றி அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் மாணவர் நலன் சார்ந்த விடயங்களில் பழைய மாணவர் சங்கம் தங்களின் ஆக்க பூர்வமான பங்களிப்புக்களை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக முன்னெடுப்பது  தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அனைத்து கல்வியாண்டு பழைய மாணவர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அனைவரையும் உள்ளடக்கியதாக சங்கத்தின் நிருவாக கட்டமைப்பை சீரமைக்கும் முகமாக ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு இணைப்பாளரை நியமித்து அனைத்து பிரிவு பழைய மாணவர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதம் பழைய மாணவர்களின் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து பழைய மாணவர்களுக்குள் ஒரு வலையமைப்பை ஏற்படுத்தவுள்ளதாகவும்  சங்கத்தினர் கல்முனை நெற்றுக்கு தெரிவித்னர்.

பழைய மாணவர் சங்கத்தில் இணையாதவர்கள் தொடர்புகள் கிடைக்காதவர்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கும், சங்கத்தில் இணைந்து கொள்வதற்கும் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

கென்றி அமல்ராஜ் 0773664324

செல்வராஜ் சிந்துஜன்- 0774124338

நடராஜா கதீசன் 0770555677

      

By admin