12ஆம் வட்டாரத்தில் த.தே.கூட்டமைப்பிற்கு விட்டுக்கொடுத்தால் 
10ஆம் வட்டாரத்தில் உதயசூரியனுக்கு விட்டுக்கொடுக்க நான் தயார்!
என்கிறார் கல்முனை 10ஆம்வட்டார சுயேச்சைஅணிவேட்பாளர் லிங்கேஸ்வரன்;;!
(காரைதீவு  நிருபர் சகா)
 

கல்முனை மாநகரசபையின் இரட்டை அங்கத்தவர் வட்டாரமான 12ஆம் வட்டாரத்தில் தமிழ்மகன் இருவர் தெரிவுசெய்யப்படவேண்டும். எனவே அங்கு போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு உதயசூரியன் விட்டுக்கொடுக்குமானால் அதற்கான இழப்பீட்டை நிவர்த்திசெய்ய 10ஆம் வட்டாரத்தில் உதயசூரியனுக்கு விட்டுக்கொடுக்க நான் தயார். உதயசூரியன் தயாரா?

இவ்வாறு கல்முனை மாநகரசபை தேர்தலில் கல்முனை 10ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் சுயேச்சைக்குழு மான்சின்ன  வேட்பாளர்  தொழிலதிபர் கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் பகிரங்கமாக அறைகூவல்விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

கல்முனை 12ஆம் வட்டாரத்தில் தமிழர்தரப்பில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டால் அங்கு தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோகும் ஆபத்து நிலவுகிறது.

அங்கு தமிழ்த்தரப்பில் ஒரு அணி அதுவும் அங்கு செல்வாக்குப்பெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் போட்டியிட்டால் வெற்றியை தனதாக்கிக்கொள்ளலாம்.

எனவே அங்கு அடுத்த செல்வாக்குப்பெற்ற கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணி விட்டுக்கொடுப்பொன்றை மேற்கொள்வதன் ஊடாக தமிழர்பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்.

எந்தக்காரணம்கொண்டும் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக நான் அக்கட்சிக்கு ஒரு விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள தயாராகவுள்ளேன்.

அதாவது கல்முனை 10ஆம் வட்டாரத்தில் சுயேச்சை அணியில் மான்சின்னத்தில் போட்டியிடும் நான் தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு ஒரு விட்டுக்கொடுப்பை அதாவது நான் போட்டியிலிருந்து வாபஸ் பெற்று உதயசூரியனின் வெற்றிக்கு ஒத்துழைப்பேன்.

நான் கூட்டமைப்பிற்கு எதிரானவன்தான்;. ஆனால் எந்தக்கட்டத்திலும் தமிழ்மக்களுக்கு துரோகமிழைக்கமாட்டேன். நான் மாற்றானிடம் ஒருபோதும் மண்டியிட்டதில்லை. எனது காணிகளை மாற்றானுக்கு  விற்கவில்லை. மாறாக காணிகளை வாங்கியிருக்கிறேன்.

நான் தமிழ்மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன். எனவே 12ஆம் வட்டார தமிழ்மக்கள் ஒற்றுமையாக த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்து 12ஆம் வட்டாரப் பிரதிநிதித்துவத்தைக்காப்பாற்ற முன்வரவேண்டும். என்றார்.

 

By admin