தற்போது சாய்ந்தமருதில் பதட்டம்: கடையடைப்பு: ஹக்கீமின்வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கடையடைப்பு!
அநாமதேய பிரசுரங்கள்: குறுந்தகவல் செய்திகள்: என்ன நடக்குமோ எனமக்கள் பீதியில்:
காரைதீவு நிருபர் சகா

கல்முனையைடுத்தள்ள சாய்ந்தமருதில் தற்போது ஒருவித பதட்டம் நிலவுகிறது. அங்கு கடையடைப்பு செய்துள்ளனர்.
இன்று இடம்பெறவிருக்கும் ஸ்ரீல.மு.கா தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வதை எதிர்த்தே இக்கடையடைப்பு எதிர்ப்பு இடம்பெற்றுவருகிறது.

மக்கள் இன்று கறுப்புக்கொடி கட்டி தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும் என செய்திகள் வேகமாகப் பரவியுள்ளன. துண்டுப்பிரசுரங்கள் குறூந்தகவல் செய்திகள் என காட்டுத்தீபோல செய்திகள் பரவியுள்ளதால் மக்கள் மத்தியில் பதட்டமும் பீதியும் நிலவுகின்றது.

இதனிடையே பள்ளிவாசல் நிருவாகமும் சுயேச்சைக்குழுவினரும் கல்முனை பொலிஸ் நிலையம் சென்று இன்று ஏற்படப்போகும் நிகழ்வுக்கும் எமக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாய்நதமருது உள்ளுராட்சி சபை கோரிய உரிமைப்போராட்டத்தின் விளைவாகவே இவ்எதிர்ப்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது. சாய்ந்தமருதில் தோடம்பழச்சின்னத்தில் சுயேச்சை அணி களமிறங்கியருப்பது தெரிந்ததே.

இன்று பகல் அல்லது பிற்பகலில் என்ன நடக்குமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது

By admin