நார்வே தமிழ் திரைப்பட விழா : நான்கு விருதுகளை அள்ளிய ‘அருவி’, ‘விக்ரம் வேதா….

நார்வே தமிழ் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெற்று கோலிவுட் திரையுலகினர்களுக்கு விருது வழங்கி வரும் நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் விருது பெறும் நட்சத்திரங்கள் பட்டியல் வருமாறு:

சிறந்த படம் அறம்

சிறந்த இயக்குநர் கோபி நயினார் (அறம்)

சிறந்த நடிகர் மாதவன் (விக்ரம் வேதா)

சிறந்த நடிகை அதிதி பாலன் (அருவி)

சிறந்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ் (விக்ரம் வேதா)

சிறந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு (அருவி)

சிறந்த பாடலாசிரியர் விவேக் (ஆளப்போறான் தமிழன் மெர்சல் )

சிறந்த வில்லன் போஸ் வெங்கட் (கவண்)

சிறந்த துணை நடிகர் வேல ராமமூர்த்தி (தொண்டன், வனமகன்)

சிறந்த துணை நடிகை அஞ்சலி வரதன் (அருவி)

சிறந்த ஒளிப்பதிவு ரவி வர்மன் (காற்று வெளியிடை)

சிறந்த திரைக்கதை புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)

சிறந்த பாடகர் அனிருத் (யாஞ்சி யாஞ்சி விக்ரம் வேதா)

சிறந்த பாடகி ஸ்ரேயா கோஷல் (நீதானே மெர்சல்)

சிறந்த எடிட்டர் ரேமண்ட் டெரிக் க்ரிஸ்டா (அருவி)

சமூக விழிப்புணர்வு விருது – RDராஜா (வேலைக்காரன்)

இயக்குநர் பாலுமகேந்திரா விருது நித்திலன் சுவாமிநாதன் (குரங்கு பொம்மை)

K.S.பாலசந்திரன் விருது முனிஷ்காந்த் (மரகத நாணயம், மாநகரம்)

அருவி, மற்றும் விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்களும் தலா நான்கு விருதுகளையும் மெர்சல் இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.