சீனா : ஒரே ஏவுகணை மூலம் ஏழு செயற்கைக் கோள்களை ஏவி சீனா சாதனை

சாங் ஹெங் ஒன்று என்ற மின்காந்த தகவல்களைக் கண்காணிக்கும் சோதனை செயற்கைக் கோள் பிப்ரவரி 2ஆம் நாள், சீனாவின் ஜியு ச்சுவான் செயற்கைக் கோள் செலுத்தல் மையத்திலிருந்து செலுத்தப்பட்டு, திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்த செயற்கைக் கோள், சீனாவின் நிலநடுக்கம் குறித்த முப்பரிமாண கண்காணிப்பு தொகுதியின் முதல் விண்வெளி மேடையாகும். இம்முறை, இந்தக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன், இதர 6 சிறிய செயற்கைக் கோள்களும் கூட்டாக செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.