கியூபா : ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை – கியூபா அரசாங்க ஊடகம் தகவல்……

கியூபா நட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட் தற்கொலை செய்து கொண்டது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

௬௮ வயதான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட் ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவிற்கு பிறந்தவர் .ஒரு அணுசக்தி நிபுணரான காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் இவரை அனைவரும் பெடிலிட்டோ (Fidelito) என அழைப்பதுண்டு. மேலும், லிட்டில் ஃபிடல் எனவும் இவர் அழைக்கப்பட்டு வந்தார்.

டயஸ் பலர்ட். காஸ்ட்ரோ 1949ம் ஆண்டு பிறந்த இவர், முன்னாள் சோவியத் யூனியனில் அணுசக்தி இயற்பியல் படித்தவர். கியூபா மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகர், கியூபா அறிவியல் அகாடமியின் துணை தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

ஆனால் 1990 களில் அவரது தந்தை அவரை வெளியேற்றினார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, கியூபாவின் உள்நாட்டு அணுசக்தி திட்டத்தை முடக்கியது.

68வயதாகும் டயஸ் பலர்ட் கடந்த சில மாதங்களாக  மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இவர், வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டயஸ் பலர்ட் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக அரசு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளில் கியூபா பிரதிநிதியாகவும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த விவகாரம் கியூபா மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.