நாளை அம்பாறையில் இலங்கையின் 70வது சுதந்திரதின ஏற்பாடுகள்!
(காரைதீவுநிருபர் சகா)
 

இலங்கையின் 70வது சுதந்திர தின வைபவத்தையொட்டி அம்பாறை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு நாளை பெப.4ஆம் திகதியன்று அம்பாறையில் நடைபெறவுள்ளது.

அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்திருப்பதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.

அதற்;கான ஒத்திகை நிகழ்வுகள் கடந்த 2தினங்களாக நடைபெற்றுவருகின்றன.

இதற்கான ஏற்பாட்டுக்குழுக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்கஅதிபர் துசிதவணிகசிங்க தலைமையில் நடைபெற்றது.

அதன்போது முப்படைத்துறை அதிகாரிகள் திணைக்களத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ள இச்சுதந்திரதின நிகழ்வில் மூவின மாணவர்களின் கலைநிகழ்வுகள் மேடையேறவுள்ளன.

முன்னதாக முப்டைகளினதும் பாண்ட்வாத்திய அணிகளினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளது.

இதேவேளை மாவட்டத்தின் 20பிரதேசசெயலகங்களில் அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் சுதந்திரதின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன என்று மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் மேலும் தெரிவித்தார்.

By admin