சரத்குமார் பாம்பாக நடிக்கும் ‘பாம்பன்’…..

எஸ்எஸ்கே புரொடக்ஷன் சார்பில் எஸ்எஸ்கே சங்கரலிங்கம் தயாரிக்கும் படம் ‘பாம்பன்’. இதில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தில் பாம்பு மனிதனாக சரத்குமார் நடிக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்திரா சௌந்தர்ராஜன் வசனத்தை எழுத கதை, திரைக்கதை அமைத்து ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் சரத்குமாரை வைத்து ஏய், மாயி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் பதிவுடன் துவங்கி உள்ளது. படத்தில் இடம் பெறும் இரண்டு காட்சிகள் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட ப்பட்டுள்ளது. அதில் சரத்குமார் பாம்பு மனிதனாக மிரட்டி யிருக்கிறார்.