பிலிப்பைன்ஸ்: ; பிலிப்பைன்ஸ் மேயான் எரிமலையிலிருந்து 3 கி.மீ.க்கு பரவி வரும் தீக் குழம்பு….

மேயான் எரிமலையிலிருந்து சுமார் மூன்று 3.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தீக் குழம்பு பரவியுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் ஊடகங்கள், “மேயான் எரிமலையிலிருந்து தீ குழம்பு வெளியேறி வருவாதல் அல்பே மாகாணத்தில் சுமார் 84,000 மக்கள் கடந்த இரண்டு வாரங்களில் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.என்று தெரிவிக்கின்றன
மேயான் எரிமலையைச் சுற்றி 8 கிலோமீட்டருக்கு ஆபத்து மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அனர்த்த முகாமைத்துவ தகவல் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளன.

எரிமலை பகுதிகளில் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருப்பதால் . அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேயான் எரிமலை 2,640 மீட்டர் உயரமுடையது. தலைநகர் மணி லாவில் இருந்து தென்மேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை அவ்வப்போது சீறி உயிர்களை பலி கொண்டு வருகிறது.

2006-ல் இந்த எரிமலை வெடித்தது. ஆனால் அப்போது உயிரிழப்பு ஏற்பட வில்லை. அதே ஆண்டு டிசம்பரில் கடும் புயல் வீசியது. இதில் தொடர்ந்து சீறிக் கொண்டிருந்த தீக்குழம்புகள் பொங்கி சிதறியதில் 1000 பேர் உயிரிழந்தனர்.