மியான்மர் : மியான்மர் அரசு ஆலோசகர், ஆங் சான் சூச்சி வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…

மியான்மர் அரசு ஆலோசகர், ஆங் சான் சூச்சி வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். அண்டை நாடான, மியான்மரின் அரசு ஆலோசகர், ஆங் சான் சூச்சி, 72. யாங்கூனில் உள்ள இவரது வீட்டில், நேற்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சூச்சி வீட்டில் இல்லாததால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என, அந்நாட்டு போலீசார்தெரிவித்து உள்ளனர்.
மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் விரட்டி அடிக்கப்படுவதால், அவர்கள், வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில், அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக, சூச்சி இதுவரை குரல் எழுப்பாததால், ரோஹிங்கியா ஆதரவாளர்கள் சிலர், இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.