கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறை மாவட்ட பிதேச சபைகளுக்கு திடீர் விஜயம்.
(காரைதீவு  நிருபர் சகா)
 
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கு  2018.01.31 ஆந் திகதி கிழக்கு மாகாண  ஆளுநர் றோஹித்த போகொல்லாகம திடீர் விஜயம் ஒன்றினை இறக்காம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபைகளுக்கு மேற்கொண்டிருந்தார்.
அதன் போது பிரதேச சபைகளின் வினைத்திறன்  அதன் செயற்பாடுகள், மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் அங்குள்ள குறைபாடுகள் பற்றி மிகவும் விரிவான முறையில்  பிரதேச சபைகளின் செயலாளர்களிடத்தில்  ஆளுநர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடை பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ள  உறுப்பினர்களுக்கான சபா மண்டபம் மற்றும் அங்கு அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆசனங்கனையும் நேரில் சென்று பார்வை இட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான மேலதிக உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தார்.
மேலும் பிரதேச சபைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள், வெளிச் சுத்தங்களை நேரில் சென்று   ஆளுநர் அவர்கள் பார்வை இட்டார்.
அந்நிகழ்வில்  ஆளுநரின் செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கௌவ ஆளுநரின் செயலக உத்தி யோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin