பேரினவாதக்கட்சிகள் இதுவரை தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்ததா?
வயிற்றுப்பிழைப்புக்கும் பொக்கட் நிரப்புவதற்கும் பேரினவாதகட்சிகளில் எம்மவர் வாக்குக்கேட்கிறார்கள்! காரைதீவு த.தே.கூட்டமைப்பு பிரசாரக்கூட்டத்தில் கோடீஸ்வரன் கேள்வி!
(காரைதீவு நிருபர் சகா)
 

இலங்கை வரலாற்றில் பேரினவாதக்கட்சிகள் தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக இதுவரை குரல்கொடுத்ததா? இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களின் உரிமைக்குரலை நசுக்கவே அவர்கள் செயற்பட்டனர். அப்படிப்பட்ட கட்சிகளில் இணைந்து வயிற்றுப்பிழைப்புக்கும் தங்கள் பைகளை நிரப்புவதற்குமாக எம்மவர் வாக்குக்கேட்கிறார்கள். வெட்கமில்லையா?

இவ்வாறு காரைதீவில் நேற்று(31) நடைபெற்ற தமிழ்த்தேசியக்கட்சி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்  கேள்வியெழுப்பினார்.

காரைதீவு பிரதேசசபையில் த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் சபாபதி நேசராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

தமிழரின் உரிமைகளைப்பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. இது வெறுமனே பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல.

இணைந்த வடக்கு கிழக்கிற்குள் சமஷ்ட்டி; முறையிலான அரசியல்தீர்வொன்றை நோக்கிப் பயணிக்கின்றது எமது கட்சி.

தமிழர் உரிமைக்காக தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஏன் ஜ.நாவிலும் குரல்எழுப்பிக்கொண்டிருக்கும் எமது கட்சி தமிழ்மக்களுக்கான நீடித்துநிலைக்கும் நிரந்தர தீர்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட தமிழ்மக்களின் ஒரே கட்சியான த.தே.கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்காக நசுக்குவதற்காக பல சக்திகள் பகீரதப்பியத்தனம்எடுக்கின்றன.

புதியஅரசியல் யாப்புத்தயாரிப்பில் எமது கட்சியின் பங்கு அளப்பெரியது.

இவற்றையலெலாம் விட்டுவிட்டு துரோகிகள் எம்மை விமர்சிக்கிறார்கள்.

தமிழனைக்கொன்றுகுவித்த மஙிந்த அரசை வீட்டுக்குஅனுப்பியவர்கள் நாங்கள். உங்களால் முடியுமா?

நிலைமை அப்படியிருக்க ஸ்ரீல.சு.கட்சியில் தேர்தல் கேட்கிறார்களாம். தமிழ்மக்கள் வாக்களிப்பார்களா? ஒருவாக்குக்கூட போடக்கூடாது.

மகாசபையை உருவாக்கி சுயலாபத்திற்காக சுயேச்சையில் சிலர் களமிறங்கியுள்ளனர். 35பேரில் 14பேர் வேட்பாளர்கள். மக்களுக்கு எல்லாம் விளங்கும்.

எனவே படித்த காரைதீவு மக்களே உங்களது தெரிவு வீடாகட்டும்

என்றார்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

By admin