கல்முனையில் ஐந்தாம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல்பிரச்சார பொதுக் கூட்டம்!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார  பொதுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி பி.ப 4.00 மணிக்கு, நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கட்சி பிரமுகர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

-சௌவியதாசன்-

By admin