த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நற்பிட்டிமுனை மைதானத்தில் இடம்பெற்றது!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் (01) நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் த.தே. கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் மற்றும் அதிதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, ரொலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ,  நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்தரன் கோடிஸ்வரன், தமிழரசுக்ட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான துரைராஜசிங்கம், மற்றும் வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

By admin