கல்முனை 12ஆம் வட்டாரத்தில் த.தே.கூட்டமைப்பிற்கு பூரணஆதரவு!
கல்முனைதமிழ்இளைஞர்கள் ஒன்றுகூடிமுடிவு:இன்றுதொடக்கம் பிரச்சாரம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
கல்முனை மாகரசபைக்கான தேர்தலில் இரட்டை அங்கத்தவர் வட்டாரமான கல்முனை 12ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தமது வட்டாரத்தின் பூரண ஆதரவை  வழங்குவதாக கல்முனை  இளைஞர்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.
இந்து முடிவை ஒன்றியத்தின் தலைவர் ஆ.நிமலன்   செயலாளர் என்.சுஜீத் பொருளாளர் பி.என்.ஹரேகிருஸ்ணா  ஆகியோர் கையொப்பமிட்ட ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நாளை (2)  முதல் 12ஆம் வட்டடாரத்துள் இறங்கி வீடுவீடாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.
அவர்களது அறிக்கையில்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
கல்முனை 12ஆம் வட்டாரம் சற்று அசாதரண களநிலவரத்துடன்கூடியது. அங்கு பெரும்பான்மையாக த.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவிருப்பதை அறிந்தோம். இருப்பினும் அது 100வீதமாகின்ற பட்சத்தில் மட்டுமே தமிழரின் வெற்றி திர்மானிக்கப்படும்.
எனவேதான் நாம் கல்முனை சைனிங்க் விளையாட்டக்கழக மைதானத்தில்கூடி ஒரு முடிவுக்கு வந்தோம்.
அதற்கிணங்க நாம் இம்முறை சில நிபந்தனைகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பை மாத்திரம் ஆதரித்து எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்தோம்.
அதற்கிணங்க 12ஆம் வட்டார தமிழ் வாக்காளர்களே அனைவரும் ஒன்றுசேர்ந்து த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்.
அதைவிட முக்கியம் கடந்தகாலங்களைப்போலல்லாது அனைவரும் 100வீதம் காலையிலேயே வாக்களிக்கவேண்டும் என்று அன்பாகக்கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை 12ஆம் வட்டாரத்தில் த.தே.கூட்டமைப்பு சார்பில் சந்திரசேகரம் ராஜன் மற்றும் கே.சிவலிங்கம் ஆகியோர்  போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

By admin