ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் இது 6.1 ஆக பதிவு  ஒருவர் மரணம்……

ஆப்கானிஸ்தானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 6.1 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். ஆப்கானிஸ்தானில் வடக்கு எல்லையில் இந்துகுஷ் பகுதியில் உள்ள தஜிகிஸ்தானை மையமாக வைத்து 191 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. டெல்லியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பெசாவர், மற்றும் லாகூரில் நில அதிர்வு உணரப்பட்டது. பல்வேறு இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குவட்டா நகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாள். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட இதுபோன்ற சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெஷாவரில் நிலநடுக்கத்தால் பயந்து பள்ளியில் இருந்து வெளிேய ஓடிவந்த இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.டெல்லியின் சில பகுதிகளிலும் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அலுவலகம், வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். சிறிது நேரத்திற்கு பின்னர் இயல்பு நிலை திரும்பியது.