இயக்குனர் ஜோயலின் இயக்கத்தில் அஜயின் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் உருவான The Queen குறும்படம் இரண்டாவது முறையாக சர்வதேச குறும்பட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியாவின் Lakeview Film Festival சர்வதேச குறும்படபோட்டியில் வெற்றிபெற்றதோடு நேற்று  (31.01.2018) அமெரிக்காவில் நடைபெறும் DMOFilm Festivalல் The Queen குறும்படம் உத்தியோகபூர்வமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இக்குறும்படத்தின் அஜய் மாறுபட்டபாத்திரத்தில் நடித்திருப்பதுடன் மனோஜிதன் ஒளிப்பதிவினை கையாண்டுள்ளார். ரொஜர் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்தின் ஒப்பனையினை கவிப்பிரியன் செய்துள்ளார். செல்வகுமார் தயாரிக்க ஜோயல் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோயல் குழுவினர் தயாரித்த பல குறும்படங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல விருதுகளை பெற்றுவருகின்றமை கல்முனை பிரதேசத்திற்கு பெருமை தரும் விடயமாகும். இவர்கள் இத்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

By admin