உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக இருக்கப் போகிறதா கேப்டவுன்?

நாம் மக்களை தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை… கட்டாயப்படுத்த போகிறோம்.’ கேப்டவுன் மேயர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

ஆம், தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக விரைவில் அறியப்படும் சூழல் உருவாகியுள்ளதால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக அந்நகரில் போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன.

இதனால் நீர் மக்களின் தேவைக்கு ஏற்ப அளவீடு செய்தே பிறகே திறந்து விடப்படுகிறது. நாளுக்கு நாள் மக்கள் பயன்பாடுகளுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது