இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ படத்திற்கு கிடைத்த பாராட்டு

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பு’ படத்திற்கு, திரைப்பட விழாவில் பாராட்டு கிடைத்துள்ளது.
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்னும் திரைக்கு வராத இந்தப் படம், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 47வது நாட்டர்டாம் திரைப்பட விழாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டுள்ளது.
கடந்த 27, 28 மற்றும் 30ஆம் தேதி என மூன்று காட்சிகள் இதுவரை திரையிடப்பட்டுள்ளன.
மூன்று காட்சிகளுமே அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி, படத்தைப் பாராட்டியுள்ளனர். அத்துடன், இன்றும் ஒரு காட்சி திரையிடப்பட இருக்கிறது.