உலகில் செல்வ சமத்துவமின்மை அதிகரித்துள்ளது: உலக வங்கி

கடந்த 20 ஆண்டுகளில், உலகின் செல்வம் விரைவாக அதிகரித்துள்ளது. இருப்பினும், அதன் சமத்துவமின்மை இன்னும் கடுமையாக காணப்படுகிறது என்று உலக வங்கி 30ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செல்வம், அதிக வருமானம் உடைய நாடுகளுக்குச் செல்லும் போக்கு தணிவடைந்து வருகிறது. ஆனால், குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கும் நடுத்தர மற்றும் உயர்  வருமானமுள்ள நாடுகளுக்கும் இடையேயான இடைவெளி தெளிவாகிறது. கடந்த 20 ஆண்டுகளில்,பெருபான்மையான நாடுகளில் நபர்வாரி செல்வம் அதிகரித்துள்ளது. நடுத்தர வருமானமுள்ள நாடுகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒதுக்கீட்டை அகிகரித்துள்ளது இதற்கான முக்கிய காரணமாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில்,செல்வ சமத்துவமின்மை இன்னும் கடுமையாக உள்ளது. குறைந்த வருமானமுள்ள நாடுகளில் இருப்பதை விட, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த அதிக வருமானமுள்ள நாடுகளில் நபர்வாரி செல்வம், 52 மடங்குகளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.