அதிபர் மாளிகை சுற்றி வைப்பு: யேமென் பிரதமர் தப்பியோட்டம்

யேமென் நாட்டின் அதிபர் மாளிகை பிரிவினைவாதிகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால், ஏமன் பிரதமர் அகமது ஒபைது நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

யேமென் நாட்டில் அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக  பிரிவினைவாதிகளின் கை ஓங்கியுள்ளது. தெற்கு யேமென் தனியாக பிரித்து சுதந்திரம் வேண்டும் என்று போராடும் பிரிவினைவாதிகளால் பெரும் தொல்லைக்கு ஆளான யேமென் அரசு, பிரிவினைவாதிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தத

இதனல் ஆயுதம் ஏந்தி போராடி வரும் பிரிவினைவாதிகள் யேமென் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தூள்ளது.

இந்த நிலையில் யேமென் பிரதமர் அகமது ஒபைது நாட்டை விட்டு தப்பியோட முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் யேமென் அதிபர் அபெத் ராப்போ மன்சூர் ஹாதி நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. என்றும் கடைசிவரை போராடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.