அம்பாறையில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி : நாளை தைப்பூசம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
நீண்டவரட்சிக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நேற்று  (29) திங்கட்கிழமை கனமழை பொழிந்துள்ளது.
நிலம் குளிர நன்றாகப்பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளைப்பொறுத்தவரையில் ஒரு சாரார் அறுவடை என்பதால் சிரமப்பட்டாலும் இன்னுமொருசாரார் நீர்வேண்டியிருப்பதால் சந்தோசமடைந்தார்கள்.
கடந்த 3தினங்களாக வானம் கறுத்து மப்பும் மந்தாரமுமாக இருந்துவந்தவேளையில்  காலை 11.45மணியளவில் பாரியளிவில் மழைபொழிய ஆரம்பித்தது. தற்போதும் பெய்கிறது.
 
நாளை 31 இல் தைப்பூசம்.!
இதேவேளை நாளை 31ஆம் திகதி இந்துக்களின் தைப்பூச நிகழ்வு இடம்பெறவுள்ளது. வயலில் புதிரெடுத்துவந்து அதனைக்குற்றிஅ ம்மனுக்கு அமுதுபடைத்து மகிழும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
தைப்பூசத்தையொட்டி பெரும்பாலான ஆலயங்களில் விசேட பூஜை இடம்பெறுவதும் வழக்கமாகும்.
தைப்பூசத்திற்கும் மழைபொழிந்து வைள்ளம் போடுவதும் ஒரு ஜதீகம்தான்.
 
உகந்தமலை   முருகனாலயத்தின் வருடாந்த தைப்பூசத்திருநாள் பெருவிழாநாளை  
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த தைப்பூசத்திருநாள் பெருவிழாநாளை தன்கிழமை(31.1.2018) நடைபெறும்.
நாளைய  தினம் சந்திரகிரகணம் பி.ப.5.18க்கு தொட்டு இரவு 8.42க்கு மோட்சம் அடைவதால் அன்றைய தைப்பூச நிகழ்வுகள் யாவும் பி.ப.4மணிக்கு முன்பாகவே நடைபெறும் என ஆலய நிருவாகசபைச் செயலாளர் கு.ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்.
நாளை (31.1.2018) காலை 10மணிக்கு பாற்குடபவனி மலைக்கோயில் வள்ளிநாயகி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீபஞ்சாட்சரம் கூறினார்.
நாளை பி.ப. 1மணிக்கு திருவிளக்குப்பூஜை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை அலங்கார பூஜை தொடர்ந்து சுவாமி உள்வீதி வெளிவீதி உலாவரலும் இடம்பெறும்.திருவிளக்குப்பூஜைக்கான ஆயத்தங்களுடன் அடியார்கள் வருகைதரவேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
நாளை  பகல் அன்னதானம் வருடாந்த உபயகாரர் மட்.ஆசிரியர்கலாசாலை ஓய்வுநிலை அதிபர் வே.இலட்சுமிசுந்தரம் அவர்களால் வழங்கப்படும்.
நாளை  விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்.

By admin