கல்முனை 12ஆம் வட்டாரத்தில் த.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்க
மாதர்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் தீர்மானம்!
(காரைதீவு நிருபர் சகா)

கல்முனை மாநகரசபையின் இரட்டை அங்கத்தவர் வட்டாரமான 12ஆம் வட்டாரத்திலுள்ள
தமிழ்ப்பிரதேச மாதர்சங்கங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் எதிர்வரும்
உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதென
தீர்மானம் எடுத்துள்ளன.

கல்முனை மாநகரசபையில் 23வட்டாரங்களுள்ளன. அவற்றில் 12 ஆம் வட்டாரம்
இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகும். இங்கு 8725 தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள்
உள்ளனர்.அவர்களில் 4517 தமிழ் வாக்காளர்களும் 4208 முஸ்லிம்
வாக்காளர்களும் அடங்குகின்றனர்.

இப்பிரிவில் கல்முனை 02 02ஏ 02பி 01பி 01சி 01ஈ(தமிழ்ப் பிரிவுகள்)
01(முஸ்லிம் பிரிவு)கல்முனை 03 03ஏ(தமிழ்ப் பிரிவுகள்) 03(முஸ்லிம்
பிரிவு) கல்முனைக்குடி 01 ஆகிய 11 கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ளன.

இங்கு 10 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இவை கல்முனைக்குடி
தொடக்கம் கல்முனை வரையுள்ள 06 பாடசாலைகளில் அமையவுள்ளன. கல்முனைக்குடி
அல்பஹ்றியா மகாவித்தியாலயம் இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் கல்முனை
மாமாங்கவித்தியாலயம் கல்முனை விவேகானந்த தமிழ்வித்தியாலயம் கல்முனை
இ.கி.மி.மகா வித்தியாலயம் கல்முனை கார்மேல் பற்றிமாக்கல்லூரி ஆகிய 6
பாடசாலைகளில் வாக்களிப்புநிலையங்கள் அமையவுள்ளன.

கல்முனை தமிழ்ப்பிரதேச மாதர்சங்கங்களின் பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம்
திருமதி கண்ணன் ரஜனி மற்றும் ஜே.மதுலா தலைமையில் கல்முனை சைனிங்ஸ்ரார்
மைதானத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களான
ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன் கு.ஏகாம்பரம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
அழைக்கப்பட்டிருந்தனர்.

ஒருமணிநேர கலந்துரையாடலின்பின்னர் இம்முறை தேர்தலில்
த.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை கல்முனையிலுள்ள சைனிங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நியுஸ்ரார்
விளையாட்டுக்கழகம் உள்ளிட்ட விளையாட்டுக்கழகங்கள் நேற்றிரவு
த.தே.கூட்டமைப்பின் 12ஆம் வட்டாரவேட்பாளர் ராஜனின் தேர்தல் அலுவலகத்தில்
சந்திப்பொன்றை நடாத்தியது.

அக்கூட்டத்திற்கு சமுகமளித்திருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்
வேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன்ஆகியோரிடம்
விளையாட்டுக்கழகங்கள் சிலகோரிக்கைகளை முன்வைத்துக்கலந்துரையாடின. குறித்த
கோரிக்கைகளை வேட்பாளர்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தினால் தமது ஆதரவை
த.தே.கூட்டமைப்பிற்கு வழங்குவதாக உறுதியளித்தன.

 

By admin