ரஜனி அரசியல் : பாஜகவுடன் இணைய ரஜினி வைத்த நிபந்தனை என்ன ?

தமிழகத்தில் ரஜினியின் அரசிய குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை ரஜினி குறித்து கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அதற்கு சமயம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது இப்போதே நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறதாம் தமிழக அரசு என செய்திகள் தெரிவிக்கின்றன

இதனால் கொஞ்சம் சுதாகரித்துக் கொண்ட ரஜினி, பாஜகவுடன் இணைந்து அரசியல் செய்ய சம்மதம். ஆனால் அதற்கு முன் இந்த அரசு உடனே கலைக்கப்படவேண்டும் என்று ரஜினி நிபந்தனை விதித்ததாகவும், அதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வெகுவிரைவில் அரசு கலைப்பு செய்தி வரும் என்றும், 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் அதுவரை தமிழகத்தில் கவர்னர் ஆட்சிதான் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் முக்கிய தலைகள் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

 

 

 

VIDEO : Bomba