90வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. ஷேப் ஆஃப் தி வாட்டர் திரைப்படம் 13 பரிந்துரைகள் பெற்றுள்ளது.

 

90 ஆஸ்கர் விருது விழாவில் பரிந்துரைக்கப்படவுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை பிரியங்கா சோப்ரா, ரோசாரியோ டாசன், ரெபெல் வில்சன், மிஷெல் யோ உள்ளிட்டோர் அறிவித்தனர்.

அதிகபட்சமாக ஷேப் ஆஃப் தி வாட்டர்(SHAPE OF THE WATER )திரைப்படம் 13 பரிந்துரைகள் பெற்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க்(Dunkirk ) படம் 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லேடி பேர்ட் திரைப்பட இயக்குநர் க்ரேடா கெர்விக் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், ஆஸ்கரில் சிறந்த இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 5வது பெண் இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். மட்பவுண்ட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரேஷல் மாரிஸன், சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் பரிந்துரைக்கப்படும் முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

கெட் அவுட் திரைப்பட இயக்குநர் ஜோர்டன் பீலே சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்படும் 5வது கருப்பின இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் மொத்தம் 9 படங்கள் போட்டியிடவுள்ளது.

 

ஹார்வீ வீன்ஸ்டின் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை ஹாலிவுட்டை பாதித்திருக்கும் இந்த வேளையில் ஆஸ்கர் விழா, இழந்த பொலிவை சற்று மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு பரிந்துரை பட்டியல்

சிறந்த திரைப்படம்

கால் மீ பை யுவர் நேம்

டார்க்கெஸ்ட் ஹவர்

டன்கிர்க்

கெட் அவுட்

லேடி பேர்ட்

ஃபாண்டம் த்ரெட்

தி போஸ்ட்

தி ஷேப் ஆஃப் வாட்டர்

த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

சிறந்த நடிகர்

டிமோதி சாலமெட் – கால் மீ பை யுவர் நேம்

டேனியல டே லீவிஸ் – ஃபாண்டம் த்ரெட்

டேனியல் கலூயா – கெட் அவுட்

கேரி ஓல்ட்மேன் – டார்கஸ்ட் ஹவர்

டென்சல் வாஷிங்டன் – ரோமன் ஜெ இஸ்ரேல்

சிறந்த நடிகை

சாலி ஹாக்கின்ஸ் – தி ஷேப் ஆஃப் வாட்டர்

ஃபிரான்சஸ் மெக் டார்மண்ட் – த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

மார்கட் ராபி – ஐ டான்யா

சார்ஸே ரானன் – லேடி பேர்ட்

மெரில் ஸ்ட்ரீப் – தி போஸ்ட்

சிறந்த உறுதுணை நடிகர்

வில்லியம் டாஃபோ – தி ஃப்ளோரிடா ப்ராஜக்ட்

வுட்டி ஹாரெல்சன் – த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

ரிச்சர்ட் ஜென்கின்ஸ் – தி ஷேப் ஆஃப் வாட்டர்

க்றிஸ்டோஃபர் ப்ளம்மர் – ஆல் தி மனி இன் தி வேர்ல்ட்

சாம் ராக்வெல் – த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

சிறந்த உறுதுணை நடிகை

மேரி ஜே – மட்பவுண்ட்

ஆலிசன் ஜேனி – ஐ டான்யா

லெஸ்லி மான்வில் – ஃபாண்டம் த்ரெட்

லாரி மெட்காஃப் – லேடி பேர்ட்

ஆக்டேவியா ஸ்பென்சர் – தி ஷேப் ஆஃப் வாட்டர்

சிறந்த இயக்குநர்

க்ரேடா கெர்விக் – லேடி பேர்ட்

கிறிஸ்டோஃபர் நோலன் – டன்கிர்க்

பால் தாமஸ் ஆண்டர்சன் – ஃபாண்டம் த்ரெட்

ஜோர்டன் பீலே – கெட் அவுட்

கியர்மோ டெல் டோரோ – தி ஷேப் ஆஃப் வாட்டர்

சிறந்த திரைக்கதை

எமிலி வி கார்டன், குமாய்ல் நான்ஜியானி – தி பிக் ஸிக்

ஜோர்டன் பீலே – கெட் அவுட்

க்ரேடா கெர்விக் – லேடி பேர்ட்

கியர்மோ டெல் டோரோ, வனேசா டெய்லர் – தி ஷேப் ஆஃப் வாட்டர்

மார்டின் மெக் டோனா – த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

சிறந்த தழுவல் திரைக்கதை

ஜேம்ஸ் ஐவரி – கால் மீ பை யுவர் நேம்

ஸ்காட் நியூஸ்டாடர், மைக்கேல் ஹெச் வெப்பர் – தி டிஸாஸ்டர் ஆர்டிஸ்ட்

ஸ்காட் ஃப்ராங், ஜேம்ஸ் மேன்கோல்ட், மைக்கேல் க்ரீன் – லோகன்

ஆரோன் சார்கின் – மாலி’ஸ் கேம்

விர்ஜில் வில்லியம்ஸ், டீ ரீஸ் – மட்பவுண்ட்

சிறந்த படத்தொகுப்பு

பேபி ட்ரைவர்

ஷே ஆஃப் வாட்டர்

ஐ டான்யா

டன்கிர்க்

த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

பியூட்டி அண்ட் தி பீஸ்ட்

ப்ளேட் ரன்னர் 2049

டார்கஸ்ட் ஹவர்

டன்கிர்க்

தி ஷேப் ஆஃப் வாட்டர்

சிறந்த ஆடை வடிவமைப்பு

பியூட்டி அண்ட் தி பீஸ்ட்

டார்கஸ்ட் ஹவர்

ஃபாண்டம் த்ரெட்

தி ஷேப் ஆஃப் வாட்டர்

விக்டோரியா அண்ட் அப்துல்

சிறந்த ஒப்பனை, சிகையலங்காரம்

டார்கஸ்ட் ஹவர்

விக்டோரியா அண்ட் அப்துல்

வொண்டர்

சிறந்த ஒளிப்பதிவு

ப்ளேட் ரன்னர் 2049

டார்கஸ்ட் ஹவர்

டன்கிர்க்

மட்பவுண்ட்

தி ஷேப் ஆஃப் வாட்டர்

சிறந்த கிராபிக்ஸ்

ப்ளேட் ரன்னர் 2049

கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 2

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடை

வார் ஃபார் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்

காங்: ஸ்கல் ஐலேண்ட்

சிறந்த ஆவணப்படம் (குறும்படம்)

எடித் + எட்டி

ஹெவன் இஸ் எ ட்ராஃபிக் ஜேம் ஆன் தி 405

ஹெராயின்

நைஃப் ஸ்கில்ஸ்

ட்ராஃபிக் ஸ்டாப்

சிறந்த ஆவணப்படம்

அபாகஸ்: ஸ்மால் எனஃப் டு ஜெயில்

ஃபேசஸ் ப்ளேசஸ்

ஐகாரஸ்

லாஸ்ட் மென் இன் அலெப்போ

ஸ்ட்ராங் ஐலேண்ட்

சிறந்த பாடல்

மைட்டி ரிவர் – மட்பவுண்ட்

மிஸ்டரி ஆஃப் லவ் – கால் மீ பை யுவர் நேம்

ரிமெம்பர் மீ – கோகோ

ஸ்டாண்ட் அப் ஃபார் சம்திங் – மார்ஷல்

திஸ் இஸ் மீ – தி கிரேடஸ்ட் ஷோமேன்

சிறந்த பின்னணி இசை

டன்கிர்க்

ஃபாண்டம் த்ரெட்

தி ஷேப் ஆஃப் வாட்டர்

த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸைட் எப்பிங், மிஸோரி

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடை

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

தி பாஸ் பேபி

தி ப்ரெட்வின்னர்

கோகோ

ஃபெர்டினண்ட்

லவ்விங் வின்சண்ட்

சிறந்த ஒலிதொகுப்பு

பேபி ட்ரைவர்

ப்ளேட் ரன்னர் 2049

டன் கிர்க்

ஷேப் ஆஃப் வாட்டர்

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடை

சிறந்த ஒலிகலவை

பேபி ட்ரைவர்

ப்ளேட் ரன்னர் 2049

டன்கிர்க்

தி ஷேப் ஆஃப் வாட்டர்

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடை

சிறந்த அயல் மொழி திரைப்படம்

எ ஃபெண்டாஸ்டிக் வுமன் (சிலி)

தி இன்சல்ட் (லெபனான்)

லவ்லெஸ் (ரஷ்யா)

ஆன் பாடி அண்ட் சோல் (ஹங்கேரி)

தி ஸ்கொயர் (ஸ்வீடன்)

சிறந்த அனிமேஷன் குறும்படம்

டியர் பாஸ்கெட்பால்

கார்டன் பார்ட்டி

லூ

நெகட்டிவ் ஸ்பேஸ்

ரிவோல்டிங் ரைம்ஸ்

சிறந்த குறும்படம்

டிகால்ப் எலிமெண்டரி

தி லெவென் ஓ க்ளாக்

மை நெஃப்யூ எம்மெட்

தி சைலண்ட் சைல்ட்

வொடு வோடே