ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தொண்டர் குழுவினரினால் கள பயணம் முன்னெடுப்பு.

(டினேஸ்)

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களது வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தியையும் நோக்காக கொண்டு செயற்படும் ஜேர்மன் உதயம் தொண்டு நிறுவனத்தின் இளைஞர் தொண்டர் குழுவினரின் கள பயணம் நேற்று( 28 )திகதி கிரான் கல்லடிவெட்டை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இக்கள விஜயமானது அமைப்பின் மேற்பார்வையாளரின் ஆலோசனைக்கு இணங்க செயற்பாட்டாளர் எம்.டிலான் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அமைப்பின் சார்பாக பயணாளியாக தெரிவு செய்யப்பட்டு பரிசீலனைக்குட்பட்ட நபரின் இல்லத்தில் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படவுள்ள ஆடுகளுக்கான கொட்டில்கள் நிர்மாணிக்கப்பட்டதுடன் அக்குடும்பத்தாரின் மேலதிக குறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin